/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
வங்கதேச அணி வெற்றி: வெஸ்ட் இண்டீசை வீழ்த்தியது
/
வங்கதேச அணி வெற்றி: வெஸ்ட் இண்டீசை வீழ்த்தியது
UPDATED : அக் 19, 2025 05:56 PM
ADDED : அக் 18, 2025 10:53 PM

மிர்புர்: முதல் ஒருநாள் போட்டியில் அசத்திய வங்கதேச அணி, 74 ரன் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீசை வீழ்த்தியது.
வங்கதேசம் சென்றுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி மிர்புரில் நடந்தது. 'டாஸ்' வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி 'பீல்டிங்' தேர்வு செய்தது.
வங்கதேச அணிக்கு தவ்ஹித் (51) நம்பிக்கை தந்தார். மஹிதுல் (46), நஜ்முல் ஹொசைன் ஷான்டோ (32), ரிஷாத் ஹொசைன் (26) கைகொடுக்க, வங்கதேச அணி 49.4 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 207 ரன் எடுத்தது. வெஸ்ட் இண்டீஸ் சார்பில் ஜெய்டன் சீல்ஸ் 3 விக்கெட் வீழ்த்தினார்.
எட்டக்கூடிய இலக்கை விரட்டிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு பிரண்டன் கிங் (44), அலிக் அதனாசே (27) நல்ல துவக்கம் கொடுத்தனர். ரிஷாத் கான் 'சுழலில்' கீசி கார்டி (9), ரூதர்போர்டு (0), ராஸ்டன் சேஸ் (6) சிக்கினர். கேப்டன் ஷாய் ஹோப் (15) நிலைக்கவில்லை. வெஸ்ட் இண்டீஸ் அணி 39 ஓவரில், 133 ரன்னுக்கு சுருண்டு தோல்வியடைந்தது. வங்கதேசம் சார்பில் 6 விக்கெட் சாய்த்த ரிஷாத் ஹொசைன், ஆட்ட நாயகன் விருது வென்றார்.
வங்கதேச அணி 1-0 என முன்னிலை பெற்றது.