sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 19, 2025 ,ஐப்பசி 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

விளையாட்டு

/

கிரிக்கெட்

/

பெர்த்தில் சரிந்தது இந்திய 'பேட்டிங்': முதல் சவாலில் ஏமாற்றம்

/

பெர்த்தில் சரிந்தது இந்திய 'பேட்டிங்': முதல் சவாலில் ஏமாற்றம்

பெர்த்தில் சரிந்தது இந்திய 'பேட்டிங்': முதல் சவாலில் ஏமாற்றம்

பெர்த்தில் சரிந்தது இந்திய 'பேட்டிங்': முதல் சவாலில் ஏமாற்றம்


ADDED : அக் 19, 2025 07:35 PM

Google News

ADDED : அக் 19, 2025 07:35 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெர்த்: பெர்த் ஒருநாள் போட்டியில் பேட்டர்கள் தடுமாற, இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி பெர்த்தில் உள்ள ஆப்டஸ் மைதானத்தில் நடந்தது. 'டாஸ்' வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் மிட்சல் மார்ஷ், 'பவுலிங்' தேர்வு செய்தார். இந்திய அணியில் 'ஆல்-ரவுண்டர்' நிதிஷ் குமார் அறிமுகமானார்.

'ரோ-கோ' தடுமாற்றம்: இந்திய அணிக்கு துவக்கத்தில் அதிர்ச்சி காத்திருந்தது. மணிக்கு 137.6 கி.மீ., வேகத்தில் ஹேசல்வுட் வீசிய பந்து, ரோகித் சர்மா பேட்டில் பட்டு 'எட்ஜ்' ஆக, இரண்டாவது 'ஸ்லிப்பில்' நின்ற ரென்ஷா கச்சிதமாக பிடித்தார். 7 மாதத்திற்கு பின் களமிறங்கிய ரோகித், 8 ரன்னுக்கு நடையை கட்டினார். ஸ்டார்க் பந்தை 'டிரைவ்' செய்ய பார்த்தார் கோலி. ஆனால் 'பேக்வேர்ட் பாய்ன்ட்' திசையில் கொனாலி பறந்து பந்தை பிடிக்க, கோலி 'டக்' அவுட்டானார். மிகவும் எதிர்பார்த்த 'ரோ-கோ' கூட்டணி 22 பந்தும் மட்டும் தாக்குப்பிடிக்க, இந்திய ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

துரத்திய மழை: அடுத்து எல்லிஸ் வீசிய பந்தை 'லெக்' திசையில் கேப்டன் சுப்மன் கில் அடித்தார். கீப்பர் ஜோஷ் பிலிப் 'டைவ்' அடித்து பிடிக்க, 10 ரன்னில் அவுட்டானார். இந்திய அணி 8.5 ஓவரில் 3/25 ரன் எடுத்து தவித்த போது, மழை குறுக்கிட்டது. பின் 49 ஓவர் போட்டியாக குறைக்கப்பட்டது. 11.5 ஓவரில் இந்தியா 3/37 ரன் எடுத்த போது மீண்டும் மழை பெய்தது. போட்டி 35 ஓவராக குறைக்கப்பட்டது. ஆட்டம் துவங்கியதும் ஹேசல்வுட் 'வேகத்தில்' ஷ்ரேயஸ் (11) வெளியேறினார்.

26 ஓவர் போட்டி: பின் ராகுல், அக்சர் படேல் போராடினர். 5வது விக்கெட்டுக்கு 39 ரன் சேர்த்தனர். இந்திய அணி 16.4 ஓவரில் 52/4 ரன் எடுத்த போது, மூன்றாவது முறையாக மழையால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. 26 ஓவர் போட்டியாக குறைக்கப்பட்டது. எல்லிஸ் ஓவரில் அக்சர் 1 பவுண்டரி, ராகுல் 2 பவுண்டரி விளாச, 15 ரன் எடுக்கப்பட்டன. அக்சர், 31 ரன்னுக்கு பெவிலியன் திரும்பினார். மாத்யூ ஷார்ட் ஓவரில் ராகுல் வரிசையாக இரு சிக்சர் பறக்கவிட்டார். வாஷிங்டன், 10 ரன் எடுத்தார். அறிமுக வீரரான மிட்சல் ஓவன் ஓவரில் (25வது) ராகுல் (38), ஹர்ஷித் ராணா (1) அவுட்டாகினர். குனேமன் வீசிய கடைசி ஓவரில் நிதிஷ் குமார் 2 சிக்சர் விளாசினார். இந்திய அணி 26 ஓவரில் 136/9 ரன் எடுத்தது. நிதிஷ் குமார் (19) அவுட்டாகாமல் இருந்தார்.

மார்ஷ் விளாசல்: பின் 'டக்வொர்த்-லீவிஸ்' விதிமுறைப்படி ஆஸ்திரேலிய அணி 26 ஓவரில் 131 ரன் எடுக்க வேண்டுமென இலக்கு மாற்றப்பட்டது. அர்ஷ்தீப் வேகத்தில் 'ஆபத்தான' டிராவிஸ் ஹெட் (8) அவுட்டாக, இந்திய ரசிகர்கள் நிம்மதி அடைந்தனர். மாத்யூ ஷார்ட் (8) நிலைக்கவில்லை. துாணாக நின்று விளாசிய கேப்டன் மிட்சல் மார்ஷ், கீப்பர் ஜோஷ் பிலிப் சேர்ந்து இந்திய பந்துவீச்சை சிதறடித்தனர். தமிழகத்தின் வாஷிங்டன் சுந்தர் 'சுழலில்' பிலிப் (37) சிக்கினார். ஆஸ்திரேலிய அணி 21.1 ஓவரில் 131/3 ரன் எடுத்து சுலப வெற்றி பெற்றது. மிட்சல் மார்ஷ் (46), ரென்ஷா (21) அவுட்டாகாமல் இருந்தனர்.

இரண்டாவது போட்டி அக். 23ல் அடிலெய்டில் நடக்க உள்ளது.

சிராஜ் சாகசம்

வாஷிங்டன் வீசிய பந்தை (17.2) ரென்ஷா துாக்கி அடித்தார். இதை 'லாங் ஆப்' எல்லையில் நின்ற சிராஜ் நல்ல உயரத்தில் தாவி பிடித்தார். பேலன்ஸ் கிடைக்காத நிலையில், அந்தரத்தில் பறந்தவாறு பந்தை மைதானத்திற்குள் எறிந்தார். இதனால் சிக்சர் தடுக்கப்பட, ஆஸ்திரேலிய அணிக்கு ஒரு ரன் மட்டுமே கிடைத்தது.

கோலி முதல் '0'

எட்டு பந்து மட்டும் தாக்குப்பிடித்த கோலி, ஆஸ்திரேலிய மண்ணில் பங்கேற்ற 30 ஒருநாள் போட்டிகளில் முதல் முறையாக 'டக்' அவுட்டானார்.

* சர்வதேச போட்டிகளில் கோலியை இரு முறை 'டக்' அவுட்டாக்கிய இரண்டாவது பவுலரானார் ஸ்டார்க். இதற்கு முன் இங்கிலாந்தின் ஆண்டர்சனிடம் இரு முறை 'டக்' அவுட்டாகி இருந்தார்.

* இந்தியாவின் ரோகித் (8), கோலி (0), சுப்மன் (10) என 'டாப்-3' பேட்டர் சேர்ந்து நேற்று 18 ரன் தான் எடுத்தனர். இது, 2019ல் நடந்த உலக கோப்பை (எதிர், நியூசி., 50 ஓவர், மான்செஸ்டர், எதிர்) அரையிறுதியில் எடுத்த 3 ரன்னுக்கு பிறகு மிகவும் குறைவு. அப்போது ரோகித் (1), கோலி (1), ராகுல் (1) சோபிக்கவில்லை.

ரோகித் '500'

ரோகித் சர்மா 500வது சர்வதேச கிரிக்கெட் போட்டியில் (67 டெஸ்ட்+274 ஒருநாள் போட்டி+159 டி-20) பங்கேற்றார். இம்மைல்கல்லை எட்டிய ஐந்தாவது இந்திய வீரரானார். இதற்கு முன் சச்சின் (664), கோலி (551), தோனி (535), டிராவிட் (504) எட்டினர்.

'டாஸ்' மீண்டும் 'மிஸ்'

ஒருநாள் போட்டியில் முதல் முறையாக கேப்டனாக களமிறங்கிய சுப்மன் கில் 'டாஸ்' வெல்ல தவறினார். ஒருநாள் அரங்கில் இந்திய அணி தொடர்ந்து 16வது முறையாக 'டாஸ்' இழந்தது. கடைசியாக 2023, உலக கோப்பை அரையிறுதியில் (எதிர், நியூசி., மும்பை வான்கடே) 'டாஸ்' வென்றது.

கேப்டன் சோகம்

* இந்த ஆண்டு விளையாடிய ஒருநாள் போட்டியில் இந்திய அணி முதல் தோல்வியை பெற்றது. தொடர்ச்சியாக 8 போட்டியில் (எதிர்: இங்கிலாந்து-3, சாம்பியன்ஸ் டிராபி-5) வென்றிருந்தது.

* சர்வதேச கிரிக்கெட் அரங்கில் கேப்டனாக அறிமுகமான மூன்று வித போட்டியிலும் (டெஸ்ட், ஒருநாள், 'டி-20') தோல்வியை தழுவிய 2வது இந்திய வீரரானார் சுப்மன் கில். ஏற்கனவே விராத் கோலி, கேப்டனாக இப்படி ஏமாற்றினார்.






      Dinamalar
      Follow us