/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
இங்கிலாந்து அணியில் ஆர்ச்சர் * 'டி-20' உலக கோப்பையில் வாய்ப்பு
/
இங்கிலாந்து அணியில் ஆர்ச்சர் * 'டி-20' உலக கோப்பையில் வாய்ப்பு
இங்கிலாந்து அணியில் ஆர்ச்சர் * 'டி-20' உலக கோப்பையில் வாய்ப்பு
இங்கிலாந்து அணியில் ஆர்ச்சர் * 'டி-20' உலக கோப்பையில் வாய்ப்பு
ADDED : டிச 30, 2025 10:53 PM

லண்டன்: 'டி-20' உலக கோப்பை தொடருக்கான இங்கிலாந்து அணியில் ஜோப்ரா ஆர்ச்சர் இடம் பெற்றுள்ளார்.
இந்தியா, இலங்கையில் 'டி-20' உலக கோப்பை தொடர் (பிப். 7-மார்ச் 8) நடக்க உள்ளது. 20 அணிகள் பங்கேற்கின்றன. இங்கிலாந்து சார்பில் 15 பேர் கொண்ட உத்தேச அணி அறிவிக்கப்பட்டுள்ளது. கேப்டனாக ஹாரி புரூக் நியமிக்கப்பட்டுள்ளார். 'வேகப்புயல்' ஆர்ச்சர் இடம் பிடித்துள்ளார். சமீபத்திய ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆஷஸ், மூன்றாவது டெஸ்டின் போது இடது விலா எலும்பு பகுதியில் காயம் அடைந்தார். இதனால் நான்காவது டெஸ்டில் பங்கேற்கவில்லை. தற்போது 'டி-20' உலக கோப்பைக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். இன்னொரு வேகப்பந்துவீச்சாளர் ஜோஷ் டங், பேட்டிங் 'ஆல்-ரவுண்டர்' வில் ஜேக்ஸ் இடம் பிடித்துள்ளனர்.
லிவிங்ஸ்டனுக்கு 'நோ'
ஜோஸ் பட்லர், பில் சால்ட், சாம் கர்ரான் போன்ற நட்சத்திர வீரர்களும் உள்ளனர். சமீபத்திய பிரிமியர் தொடர் ஏலத்தில் ரூ. 13 கோடிக்கு ஐதராபாத் அணியால் வாங்கப்பட்ட 'ஆல்-ரவுண்டர்' லிவிங்ஸ்டன் இடம் பெறவில்லை. விக்கெட்கீப்பர் ஜேமி ஸ்மித்திற்கும் வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கு எதிரான 'டி-20', ஒருநாள் தொடருக்கான இங்கிலாந்து அணியும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்து, வேல்ஸ் கிரிக்கெட் போர்டு வெளியிட்ட செய்தியில்,''உலக கோப்பைக்கான உத்தேச அணியில் மட்டும் ஆர்ச்சர் இடம் பெற்றுள்ளார். இலங்கை தொடரில் பங்கேற்க மாட்டார். இவரது காயத்தின் தன்மை பற்றி மருத்துவ குழுவினர் ஆய்வு செய்து வருகின்றனர்,' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
'டி-20' உலக கோப்பைக்கான இங்கிலாந்து உத்தேச அணி:
ஹாரி புரூக் (கேப்டன்), ரேகன் அகமது, ஜோப்ரா ஆர்ச்சர், டாம் பன்டன், பெத்தல், ஜோஸ் பட்லர், சாம் கர்ரான், லியாம் டாசன், பென் டக்கெட், வில் ஜேக்ஸ், ஜேமி ஓவர்டன், அடில் ரஷித், பில் சால்ட், ஜோஷ் டங், லுாக் உட்.

