
தேனி: தேனியில் உள்ள தமிழக கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடந்த 'கூச் பெஹார்' டிராபி தொடர் காலிறுதி (4 நாள்) போட்டி நடக்கிறது. நடப்பு சாம்பியன் தமிழகம், சவுராஷ்டிரா அணிகள் மோதுகின்றன. முதல் நாள் முடிவில் தமிழக அணி முதல் இன்னிங்சில் 296/9 ரன் எடுத்திருந்தது. பிரனவ் (2), சந்தீப் (0) அவுட்டாகாமல் இருந்தனர்.
நேற்று இரண்டாவது நாள் ஆட்டம் நடந்தது. பிரனவ் 10 ரன்னில் அவுட்டானார். தமிழக அணி முதல் இன்னிங்சில் 305 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. சவுராஷ்டிரா பவுலர் தேவர்ஷ் 6 விக்கெட் சாய்த்தார்.
ஹேம்சுதேசன் 'ஐந்து'
சவுராஷ்டிரா அணிக்கு வன்ஷ் ஆச்சார்யா (88), புருத்வி (41), ராவலியா (40) கைகொடுத்தனர். ஒரு கட்டத்தில் 206/5 என வலுவாக இருந்தது. பின் அடுத்தடுத்து விக்கெட் சரிய, இரண்டாவது நாள் முடிவில் முதல் இன்னிங்சில் 213/8 ரன் எடுத்து, 92 ரன் பின்தங்கி இருந்தது. தமிழகத்தின் ஹேம்சுதேசன் 5 விக்கெட் சாய்த்தார்.

