/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
மும்பை அணிக்கு 'ஷாக்' * ஜம்மு காஷ்மீரிடம் வீழ்ந்தது
/
மும்பை அணிக்கு 'ஷாக்' * ஜம்மு காஷ்மீரிடம் வீழ்ந்தது
மும்பை அணிக்கு 'ஷாக்' * ஜம்மு காஷ்மீரிடம் வீழ்ந்தது
மும்பை அணிக்கு 'ஷாக்' * ஜம்மு காஷ்மீரிடம் வீழ்ந்தது
ADDED : ஜன 25, 2025 10:24 PM

மும்பை: ரஞ்சி கோப்பை லீக் போட்டியில் மும்பை அணி, 5 விக்கெட் வித்தியாசத்தில் ஜம்மு காஷ்மீரிடம் தோல்வியடைந்தது.
மும்பையில் நடந்த 'ஏ' பிரிவு ரஞ்சி கோப்பை லீக் போட்டியில் 42 முறை சாம்பியன் ஆன மும்பை, ஜம்மு காஷ்மீர் அணிகள் மோதின. ரோகித் சர்மா, ஜெய்ஸ்வால் இடம் பெற்ற போதும், முதல் இன்னிங்சில் மும்பை அணி 120 ரன் எடுத்தது. ஜம்மு காஷ்மீர் அணி, 206 ரன் எடுத்தது. இரண்டாவது நாள் முடிவில் மும்பை அணி இரண்டாவது இன்னிங்சில் 274/7 ரன் எடுத்து, 188 ரன் முன்னிலை பெற்றிருந்தது.
நேற்று மூன்றாவது நாள் ஆட்டம் நடந்தது. ஷர்துல் தாகூர் (119), தனுஷ் (62) ரன்னில் அவுட்டாக, மும்பை அணி இரண்டாவது இன்னிங்சில் 290 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. அடுத்து களமிறங்கிய ஜம்மு காஷ்மீர் அணி இரண்டாவது இன்னிங்சில் 207/5 ரன் எடுத்து வெற்றி பெற்றது.
சுப்மன் சதம்
பெங்களூருவில் நடந்த 'சி' பிரிவு போட்டி முதல் இன்னிங்சில் பஞ்சாப் 55, கர்நாடகா 475 ரன் எடுத்தன. இரண்டாவது இன்னிங்சில் பஞ்சாப் அணிக்கு கேப்டன் சுப்மன் கில் (102) சதம் அடித்து ஆறுதல் தந்தார். இருப்பினும் பஞ்சாப் அணி 213 ரன்னில் ஆல் அவுட்டானது. பெங்களூரு அணி இன்னிங்ஸ், 207 ரன்னில் வெற்றி பெற்றது.
விஜய் சங்கர் '150'
சேலத்தில் நடக்கும் 'டி' பிரிவு போட்டி முதல் இன்னிங்சில் தமிழகம் 301, சண்டிகர் 204 ரன் எடுத்தன. நேற்று மூன்றாவது நாள் ஆட்டம் நடந்தது. தமிழகத்தின் ஜெகதீசன் 89 ரன் எடுக்க, விஜய் சங்கர் 150 ரன் விளாசினார். தமிழக அணி, இரண்டாவது இன்னிங்சில் 305/5 ரன் எடுத்து, 'டிக்ளேர்' செய்தது. 403 ரன் எடுத்தால் வெற்றி என களமிறங்கிய சண்டிகர் அணி, மூன்றாவது நாள் முடிவில் இரண்டாவது இன்னிங்சில் 113/5 ரன் எடுத்து, 290 ரன் பின்தங்கி இருந்தது.