/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
விதர்பாவை வெல்லுமா தமிழகம் * ரஞ்சி கோப்பை காலிறுதி துவக்கம்
/
விதர்பாவை வெல்லுமா தமிழகம் * ரஞ்சி கோப்பை காலிறுதி துவக்கம்
விதர்பாவை வெல்லுமா தமிழகம் * ரஞ்சி கோப்பை காலிறுதி துவக்கம்
விதர்பாவை வெல்லுமா தமிழகம் * ரஞ்சி கோப்பை காலிறுதி துவக்கம்
ADDED : பிப் 07, 2025 10:59 PM

நாக்பூர்: ரஞ்சி கோப்பை காலிறுதியில் தமிழகம், விதர்பா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
இந்தியாவின் முதல் தர ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரின் 90 வது சீசன் தற்போது நடக்கிறது. லீக் சுற்று முடிந்த நிலையில் இன்று காலிறுதி போட்டிகள் துவங்குகின்றன. நாக்பூரில் நடக்கும் போட்டியில் தமிழகம், விதர்பா அணிகள் மோதுகின்றன.
லீக் சுற்றில் 'டி' பிரிவில் இடம் பெற்ற தமிழக அணி, 7 போட்டியில் 3ல் வென்றது. 3 'டிரா' ஆனது. கடைசி போட்டியில் மட்டும் தோற்றது. எனினும் 25 புள்ளியுடன் பட்டியலில் 2வது இடம் பெற்று காலிறுதிக்கு முன்னேறியது.
பேட்டிங்கில் ஜெகதீசன் (634 ரன்), சித்தார்த் (532), விஜய் சங்கர் (449), ரஞ்சன் பால் (383) உதவுகின்றனர். பவுலிங்கில் சுழற்பந்து வீச்சாளர்கள் அஜித் ராம் (31 விக்.,), கேப்டன் சாய் கிஷோர் (19) நம்பிக்கை தருகின்றனர்.
விதர்பா அணியை 'பி' பிரிவில் 6 வெற்றியுடன் (1 'டிரா') 40 புள்ளி பெற்று, முதலிடம் பிடித்து காலிறுதிக்குள் நுழைந்தது. பேட்டிங்கில் ரத்தோட் (603), வாத்கர் (556), கருண் நாயர் (440), மேல்வர் (374), துருவ் ஷோரே (313) பலம் சேர்க்க, பவுலிங்கில் ஹர்ஷ் துபே, 55 விக்கெட் சாய்த்து மிரட்டுகிறார். தவிர வாஹரே (26), ஆதித்யாவும் (22) பலம் சேர்க்கின்றனர்.
மும்பை-ஹரியானா
நடப்பு சாம்பியன் மும்பை, ஹரியானா மோதும் காலிறுதி, கோல்கட்டா ஈடன் கார்டனில் நடக்க உள்ளது. மற்ற காலிறுதி போட்டிகளில் ஜம்மு காஷ்மீர்-கேரளா (புனே), சவுராஷ்டிரா-குஜராத் (ராஜ்கோட்) அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.