/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
ரபாடா 'வேகத்தில்' அதிர்ந்த ஆஸி., * தென் ஆப்ரிக்க பவுலர்கள் அபாரம்
/
ரபாடா 'வேகத்தில்' அதிர்ந்த ஆஸி., * தென் ஆப்ரிக்க பவுலர்கள் அபாரம்
ரபாடா 'வேகத்தில்' அதிர்ந்த ஆஸி., * தென் ஆப்ரிக்க பவுலர்கள் அபாரம்
ரபாடா 'வேகத்தில்' அதிர்ந்த ஆஸி., * தென் ஆப்ரிக்க பவுலர்கள் அபாரம்
ADDED : ஜூன் 11, 2025 11:00 PM

லார்ட்ஸ்: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 212 ரன்னுக்கு ஆல் அவுட்டானது.
ஐ.சி.சி., சார்பில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் நடத்தப்படுகிறது. 2023-25 சீசனுக்கான பைனல், லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நேற்று துவங்கியது. புள்ளிப்பட்டியலில் முதல் இரு இடம் பிடித்த தென் ஆப்ரிக்கா, நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலிய அணிகள் மோதுகின்றன. 'டாஸ்' வென்ற தென் ஆப்ரிக்க கேப்டன் பவுமா, பீல்டிங் தேர்வு செய்தார்.
ஸ்மித் அரைசதம்
ஆஸ்திரேலிய அணிக்கு லபுசேன், கவாஜா ஜோடி சுமாரான துவக்கம் கொடுத்தது. மறுபக்கம் வேகத்தில் மிரட்டினார் ரபாடா. 4வது ஓவரை வீசிய ரபாடா, 3வது பந்தில் கவாஜாவை 'டக்' அவுட்டானார். கடைசி பந்தில் கிரீனை (4) வெளியேற்றினார். நீண்ட நேரம் போராடிய லபுசேன் (17 ரன், 56 பந்து), யான் சென் 'வேகத்தில்' வீழ்ந்தார். தொடர்ந்து அசத்திய இவர், அபாய ஹெட்டையும் (11) நிலைக்க விடவில்லை. ஆஸ்திரேலியா 67/4 என திணறியது.
பொறுப்பாக செயல்பட்ட ஸ்மித், அரைசதம் எட்டினார். 5வது விக்கெட்டுக்கு 79 ரன் சேர்த்த போது, மார்க்ரம் சுழலில் ஸ்மித் (66) சிக்கினார். வெப்ஸ்டர் தன் பங்கிற்கு அரைசதம் அடித்தார். தேநீர் இடைவேளையின் போது ஆஸ்திரேலியா (190/5) நல்ல நிலையில் இருந்தது.
ரபாடா 'ஐந்து'
இதன் பின் திடீரென சரிவு ஏற்பட்டது. முதலில் அலெக்ஸ் கேரி (23) மஹாராஜ் சுழலில் போல்டானார். மீண்டும் மிரட்டிய ரபாடா, கம்மின்ஸ் (1), வெப்ஸ்டரை (72) வெளியேற்றினார். லியான் (0) ஏமாற்ற, ஸ்டார்க்கை (0) போல்டாக்கினார் ரபாடா. கடைசி 20 ரன்னில் 5 விக்கெட்டுகளை இழந்த ஆஸ்திரேலியா, முதல் இன்னிங்சில் 212 ரன்னுக்கு (56.4 ஓவர்) ஆல் அவுட்டானது. ரபாடா 5, யான்சென் 3 விக்கெட் சாய்த்தனர்.
அடுத்து களமிறங்கிய தென் ஆப்ரிக்க அணிக்கு மார்க்ரம் (0), ரிக்கிள்டன் ஜோடி துவக்கம் கொடுத்தது. ரிக்கிள்டன் (16), முல்டர் (6), ஸ்டப்ஸ் (2) ஏமாற்றினர். முதல் நாள் முடிவில் தென் ஆப்ரிக்க அணி முதல் இன்னிங்சில் 43/4 ரன் எடுத்திருந்தது. பவுமா (3), பெடிங்காம் (8) அவுட்டாகாமல் இருந்தனர். ஸ்டார்க் 2 விக்கெட் சாய்த்தார்.
589 ரன்
லார்ட்ஸ் மைதானத்தில் டெஸ்டில் அதிக ரன் எடுத்த அன்னிய வீரர் ஆனார் ஆஸ்திரேலியாவின் ஸ்மித் (589 ரன்). வாரன் பார்டுஸ்லே (575, ஆஸி.,), கேரி சோபர்ஸ் (571, வெ.இண்டீஸ்), பிராட்மேன் (551, ஆஸி.,), சந்தர்பால் (512, வெ.இண்டீஸ்), வெங்சர்க்கார் (508, இந்தியா) அடுத்தடுத்து உள்ளனர்.
* இம்மைதானத்தில் டெஸ்டில் அதிக அரைசதம் அடித்த வீரர்களில் முதலிடத்தை சந்தர்பாலுடன் (5) பகிர்ந்து கொண்டார் ஸ்மித் (5).
* தவிர இங்கிலாந்து மண்ணில் அதிக அரைசதம் அடித்த அன்னிய வீரர் ஆனார் ஸ்மித் (18). ஆலன் பார்டர் (17, ஆஸி.,) ரிச்சர்ட்ஸ் (17, வெ.இண்டீஸ்), பிராட்மேன் (14, ஆஸி.,) அடுத்து உள்ளனர்.
332 விக்கெட்
டெஸ்டில் அதிக விக்கெட் சாய்த்த தென் ஆப்ரிக்க பவுலர்களில் டொனால்டை (330) முந்தி, 4வது இடம் பிடித்தார் ரபாடா (332 விக்கெட்). ஸ்டைன் (439), ஷான் போலக் (421), நிடினி (390) 'டாப்-3' ஆக உள்ளனர்.
* ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்டில், 50 வது விக்கெட் என்ற மைல்கல்லை நேற்று எட்டினார் ரபாடா. இதுவரை 11 டெஸ்டில் 54 விக்கெட் சாய்த்துள்ளார்.