sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

விளையாட்டு

/

கிரிக்கெட்

/

ஆறாவது இடத்தில் இந்தியா * டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் பின்னடைவு

/

ஆறாவது இடத்தில் இந்தியா * டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் பின்னடைவு

ஆறாவது இடத்தில் இந்தியா * டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் பின்னடைவு

ஆறாவது இடத்தில் இந்தியா * டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் பின்னடைவு


ADDED : டிச 12, 2025 07:02 PM

Google News

ADDED : டிச 12, 2025 07:02 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

துபாய்: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் இந்தியா, 6வது இடத்துக்கு தள்ளப்பட்டது.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) சார்பில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் நடத்தப்படுகிறது. இரண்டு ஆண்டு நடக்கும் இத்தொடரில் ஒவ்வொரு அணியும் குறைந்தபட்சம் உள்ளூரில் 3, அன்னிய மண்ணில் 3 என மொத்தம் 6 டெஸ்ட் தொடரில் பங்கேற்கும்.

முடிவில் புள்ளிப்பட்டியலில் முதல் இரு இடம் பெறும் அணிகள் பைனலில் மோதும்.

முதல் இரு சீசனில் பைனலுக்கு (2019-21, 2021-23) முன்னேறிய இந்தியா இரண்டாவது இடம் பிடித்தது. 3வது சீசனில் (2023-25) இந்தியா 3வது இடம் பெற்று, பைனல் வாய்ப்பை இழந்தது.

தற்போது நான்காவது சீசனில் (2025-2027) நடக்கிறது. இதுவரை நடந்த போட்டிகள் முடிவில் ஆஸ்திரேலியா (100 சதவீதம்), தென் ஆப்ரிக்கா (75.00), இலங்கை (66.67) அணிகள் 'டாப்-3' இடத்தில் உள்ளன. வெஸ்ட் இண்டீசிற்கு எதிரான வெலிங்டன் டெஸ்டில் வென்ற நியூசிலாந்து (66.67) 4வது இடத்துக்கு முன்னேறியது.

9 டெஸ்டில் 4ல் மட்டும் வென்ற இந்தியா (4 தோல்வி, 1 'டிரா') 48.15 சதவீத புள்ளியுடன் 6வது இடத்துக்கு தள்ளப்பட்டது. இதனால், இந்திய அணி, 'டாப்-2' இடம் பிடிக்க, மீதமுள்ள 9 டெஸ்டில் (2 இலங்கை, 2 நியூசி., 5 ஆஸி.,) சிறப்பாக செயல்பட வேண்டிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

தவிர ஆஷஸ் தொடரில் இங்கிலாந்து அணி (30.95) அடுத்தடுத்த டெஸ்டில் வென்றால், இந்தியாவின் நிலை இன்னும் மோசமாகும்.






      Dinamalar
      Follow us