தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/கிரிக்கெட்/டெஸ்ட்: இந்தியா 'நம்பர்-6' * உலக சாம்பியன்ஷிப் பட்டியலில்

டெஸ்ட்: இந்தியா 'நம்பர்-6' * உலக சாம்பியன்ஷிப் பட்டியலில்

டெஸ்ட்: இந்தியா 'நம்பர்-6' * உலக சாம்பியன்ஷிப் பட்டியலில்


ADDED : மே 20, 2026 11:02 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 20, 2026 11:02 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

துபாய்: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியலில் இந்திய அணி ஆறாவது இடத்துக்கு தள்ளப்பட்டது.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் சார்பில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் நடத்தப்படுகிறது. இரண்டு ஆண்டு நடக்கும் இத்தொடரில் ஒவ்வொரு அணியும் குறைந்தபட்சம் உள்ளூரில் 3, அன்னிய மண்ணில் 3 என மொத்தம் 6 டெஸ்ட் தொடரில் பங்கேற்கும்.

முடிவில் புள்ளிப்பட்டியலில் முதல் இரு இடம் பெறும் அணிகள் பைனலில் மோதும்.

முதல் இரு சீசனில் பைனலுக்கு (2019-21, 2021-23) முன்னேறிய இந்தியா, 2வது இடம் பிடித்தது. 3வது சீசனில் (2023-25) இந்தியா 3வது இடம் பெற்று, பைனல் வாய்ப்பை இழந்தது.

இந்தியா பின்னடைவு

தற்போது நான்காவது சீசனில் (2025-2027) நடக்கிறது. இதுவரை நடந்த போட்டிகள் முடிவில் ஆஸ்திரேலியா (87.50 சதவீதம்), நியூசிலாந்து (77.78), தென் ஆப்ரிக்கா (75.00), இலங்கை (66.67) அணிகள் 'டாப்-4' இடத்தில் உள்ளன. பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என வென்ற வங்கதேச அணி (58.33) ஐந்தாவது இடத்துக்கு முன்னேறியது.

9 டெஸ்டில் 4ல் மட்டும் வென்ற இந்தியா (4 தோல்வி, 1 'டிரா') 48.15 சதவீத புள்ளியுடன் 6வது இடத்துக்கு தள்ளப்பட்டது. இதனால், இந்திய அணி, 'டாப்-2' இடம் பிடிக்க, மீதமுள்ள 9 டெஸ்டில் (2 இலங்கை, 2 நியூசி., 5 ஆஸி.,) சிறப்பாக செயல்பட வேண்டிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

இங்கிலாந்து 7 (31.67), பாகிஸ்தான் 8 (8.33), வெஸ்ட் இண்டீஸ் 9வது (4.17) இடத்தில் உள்ளன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us