/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
35 பந்தில் சதம்: அன்மோல்பிரீத் சாதனை * விஜய் ஹசாரே போட்டியில்...
/
35 பந்தில் சதம்: அன்மோல்பிரீத் சாதனை * விஜய் ஹசாரே போட்டியில்...
35 பந்தில் சதம்: அன்மோல்பிரீத் சாதனை * விஜய் ஹசாரே போட்டியில்...
35 பந்தில் சதம்: அன்மோல்பிரீத் சாதனை * விஜய் ஹசாரே போட்டியில்...
ADDED : டிச 21, 2024 10:41 PM

ஆமதாபாத்: 'லிஸ்ட் ஏ' கிரிக்கெட்டில் அதிவேக சதம் அடித்த இந்தியர் ஆனார் பஞ்சாப்பின் அன்மோல்பிரீத் சிங் (35 பந்து).
இந்திய கிரிக்கெட் போர்டு சார்பில், 'லிஸ்ட் ஏ' விஜய் ஹசாரே டிராபி தொடர் (50 ஓவர் போட்டி) நேற்று துவங்கியது. ஆமதாபாத்தில் நடந்த போட்டியில் பஞ்சாப், அருணாச்சல பிரதேசம் மோதின. முதலில் களமிறங்கிய அருணாச்சல பிரதேச அணி 48.4 ஓவரில் 164 ரன்னுக்கு ஆல் அவுட்டானது.
பின் களமிறங்கிய பஞ்சாப் அணிக்கு கேப்டன் அபிஷேக் (10), பிரப்சிம்ரன் ஜோடி துவக்கம் தந்தது. அடுத்து வந்த அன்மோல்பிரீத் சிங், சிக்சர், பவுண்டரி மழை பொழிந்தார். இவர் 35வது பந்தில் சதம் அடித்தார். 'லிஸ்ட் ஏ' கிரிக்கெட்டில் அதிவேக சதம் அடித்த இந்தியர் ஆனார். பஞ்சாப் அணி 12.5 ஓவரில் 167/1 ரன் எடுத்து, 9 விக்கெட்டில் வெற்றி பெற்றது. பிரப்சிம்ரன் (35), அன்மோல்பிரீத் (115 ரன், 9x6, 12x4) அவுட்டாகாமல் இருந்தனர்.
மும்பை சோகம்
ஆமதாபாத்தில் நடந்த மற்றொரு போட்டியில் மும்பை, கர்நாடகா மோதின. மும்பை அணிக்கு ஆயுஸ் மாட்ரே (78), ஹர்திக் தாமோர் (84) கைகொடுக்க, கேப்டன் ஸ்ரேயாஸ், 55 பந்தில் 114 ரன் விளாசினார். ஷிவம் துபே (63) தன் பங்கிற்கு உதவ, 50 ஓவரில் மும்பை அணி 382/4 ரன் குவித்தது.
கடின இலக்கைத் துரத்திய கர்நாடக அணிக்கு நிகின் (21), கேப்டன் மயங்க் அகர்வால் (47) ஜோடி துவக்கம் தந்தது. அனீஷ் 82 ரன் எடுத்தார். அடுத்து வந்த கிருஷ்ணன் ஸ்ரீஜித் (150 ரன், 4x6, 20x4), சதம், பிரவீன் துபே (65) அரைசதம் அடிக்க, கர்நாடக அணி 46.2 ஓவரில் 383/3 ரன் எடுத்து, 7 விக்கெட்டில் வெற்றி பெற்றது.
தமிழகம், சண்டிகர் மோத இருந்த போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டது.
மூன்றாவது இடம்
'லிஸ்ட் ஏ' கிரிக்கெட்டில் அதிவேக சதம் அடித்த இந்திய வீரர் ஆனார் அன்மோல்பிரீத் (35 பந்து). பரோடா அணிக்காக, 40 பந்தில் (எதிர், மஹாராஷ்டிரா, 2010) சதம் அடித்த யூசுப் பதான் சாதனையை தகர்த்தார்.
* சர்வதேச அளவில் அன்மோல்பீரீத் சிங், மூன்றாவது இடம் பிடித்தார். முதல் இரு இடத்தில் தெற்கு ஆஸ்திரேலியாவின் மெக்குர்க் (29 பந்து, எதிர், டாஸ்மேனியா, 2023), தென் ஆப்ரிக்காவின் டிவிலியர்ஸ் (31 பந்து, வெ.இண்டீஸ், 2015) உள்ளனர்.
இப்பட்டியலில் 'டாப்-4' வீரர்கள்
வீரர்/அணி எதிரணி ஆண்டு பந்து
மெக்குர்க்/தெற்கு ஆஸி., டாஸ்மேனியா 2023 29
டிவிலியர்ஸ்/தெ.ஆப்., வெ.இண்டீஸ் 2015 31
அன்மோல்பிரீத்/பஞ்சாப் அருணாசல பிரதேசம் 2024 35
ஆண்டர்சன்/நியூசி., வெ.இண்டீஸ் 2014 36
ரோஸ்/சாமர்செட் தேவான் 1990 36