/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
கோப்பை வென்றது கர்நாடகா * விஜய் ஹசாரே டிராபி தொடரில்...
/
கோப்பை வென்றது கர்நாடகா * விஜய் ஹசாரே டிராபி தொடரில்...
கோப்பை வென்றது கர்நாடகா * விஜய் ஹசாரே டிராபி தொடரில்...
கோப்பை வென்றது கர்நாடகா * விஜய் ஹசாரே டிராபி தொடரில்...
ADDED : ஜன 18, 2025 11:46 PM

வதோதரா: விஜய் ஹசாரே டிராபி தொடரில் கோப்பை வென்றது கர்நாடகா. நேற்று நடந்த பைனலில் 36 ரன்னில் விதர்பாவை வென்றது.
இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) சார்பில் விஜய் ஹசாரே டிராபி 32வது சீசன் நடந்தது. குஜராத் மாநிலம் வதோதராவில் நடந்த பைனலில் விதர்பா, கர்நாடகா மோதின. 'டாஸ்' வென்ற விதர்பா, பீல்டிங் தேர்வு செய்தது.
கர்நாடக அணிக்கு கேப்டன் மயங்க் அகர்வால் (32), படிக்கல் (8) ஜோடி துவக்கம் தந்தது. ரவிச்சந்திரன் ஸ்மரன் (101) சதம் விளாசினார். ஸ்ரீஜித் (78), அபினவ் (79) கைகொடுக்க, 50 ஓவரில் கர்நாடக அணி, 348/6 ரன் குவித்தது.
கடின இலக்கைத் துரத்திய விதர்பா அணிக்கு துருவ் ஷோரே சதம் (110) அடித்து உதவினார். கேப்டன் கருண் நாயர் (27), ஜிதேஷ் சர்மா (34) ஏமாற்றினர். ஹர்ஷ் துபே (63) கடைசி நேரத்தில் போராடிய போதும், வெற்றிக்கு போதவில்லை.
விதர்பா அணி 48.2 ஓவரில், 312 ரன் எடுத்து தோல்வியடைந்தது.