/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
வாஷிங்டன் சுந்தர் விலகல் * நியூசி., 'டி-20' தொடரில்...
/
வாஷிங்டன் சுந்தர் விலகல் * நியூசி., 'டி-20' தொடரில்...
வாஷிங்டன் சுந்தர் விலகல் * நியூசி., 'டி-20' தொடரில்...
வாஷிங்டன் சுந்தர் விலகல் * நியூசி., 'டி-20' தொடரில்...
ADDED : ஜன 15, 2026 09:34 PM

புதுடில்லி: இந்திய அணியின் சுழற்பந்து வீச்சு, 'ஆல் ரவுண்டர்' வாஷிங்டன் சுந்தர் 26. தமிழகத்தை சேர்ந்தவர். நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் 5 ஓவர் பந்து வீசி, 27 ரன் விட்டுக்கொடுத்தார். பின் இடது கீழ் விலா பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக வெளியேறிய இவர், மீதமுள்ள இரு போட்டியில் இருந்து விலகினார்.
தற்போது, காயம் குணமடைய கூடுதல் கால அவகாசம் தேவைப்படும் என்பதால், ஜன. 21ல் துவங்க உள்ள நியூசிலாந்துக்கு எதிரான 5 போட்டி கொண்ட 'டி-20' தொடரில் இருந்தும் வாஷிங்டன் விலகியுள்ளார்.
இந்திய கிரிக்கெட் போர்டு சார்பில் வெளியான செய்தியில்,' விலா பகுதி காயத்தால் நியூசிலாந்து தொடரில் இருந்து முழுவதும் விலகினார் வாஷிங்டன்,' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே பிப்.7ல் இந்தியா, இலங்கையில் 'டி-20' உலக கோப்பை தொடர் துவங்க உள்ளது. இதற்கு முன் வாஷிங்டன் குணமடைந்து விடுவாரா என்பது கேள்விக்குறியாக உள்ளது.
சமீபத்தில் விதைப்பையில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக, திலக் வர்மா, ஆப்பரேஷன் செய்தார். இவர், நியூசிலாந்துக்கு எதிரான முதல் 3 'டி-20' போட்டியில் இருந்து விலகினார். கடைசி இரு போட்டியில் திலக் வர்மா களமிறங்கலாம்.

