தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/கிரிக்கெட்/ரஞ்சி: தமிழகம்-பரோடா 'டிரா'

ரஞ்சி: தமிழகம்-பரோடா 'டிரா'

ரஞ்சி: தமிழகம்-பரோடா 'டிரா'


ADDED : பிப் 01, 2026 11:15 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 01, 2026 11:15 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சேலம்: தமிழகம், பரோடா அணிகள் மோதிய ரஞ்சி கோப்பை லீக் போட்டி 'டிரா' ஆனது.

சேலத்தில் நடந்த ரஞ்சி கோப்பை கிரிக்கெட் 91வது சீசனுக்கான 'ஏ' பிரிவு லீக் போட்டியில் தமிழகம், பரோடா அணிகள் மோதின. பரோடா அணி முதல் இன்னிங்சில் 375 ரன் எடுத்தது. மூன்றாம் நாள் முடிவில் தமிழக அணி முதல் இன்னிங்சில் 411/7 ரன் எடுத்திருந்தது. நிதிஷ் ராஜகோபால் (31) அவுட்டாகாமல் இருந்தார்.

நான்காம் நாள் ஆட்டத்தில் தமிழக அணிக்கு நிதிஷ் ராஜகோபால் (52) அரைசதம் கடந்து கைகொடுத்தார். வித்யுத் (15), ஜெகநாதன் ஹேம்சுதேஷன் (2) நிலைக்கவில்லை. தமிழக அணி முதல் இன்னிங்சில் 449 ரன்னுக்கு 'ஆல்-அவுட்' ஆனது. பரோடா அணி சார்பில் மகேஷ் பித்தியா 6 விக்கெட் கைப்பற்றினார்.

பின் 2வது இன்னிங்சை துவக்கிய பரோடா அணி, ஆட்டநேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 124 ரன் எடுத்திருந்தது. ஜோத்ஸ்னில் சிங் (55), சிவாலிக் சர்மா (59) அவுட்டாகாமல் இருந்தனர். இதனையடுத்து போட்டி 'டிரா' ஆனது. முதல் இன்னிங்சில் முன்னிலை பெற்ற தமிழக அணிக்கு 3, பரோடா அணிக்கு ஒரு புள்ளி வழங்கப்பட்டது.

ஆட்ட நாயகன் விருதை தமிழகத்தின் விமல் குமார் (182 ரன்) வென்றார். ஏழு போட்டியில், ஒரு வெற்றி, 4 'டிரா', 2 தோல்வி என, 14 புள்ளிகளுடன் தமிழக அணி 'ஏ' பிரிவில் 6வது இடம் பிடித்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us