தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/கிரிக்கெட்/பேட்டிங் பயிற்சியில் வாஷிங்டன்

பேட்டிங் பயிற்சியில் வாஷிங்டன்

பேட்டிங் பயிற்சியில் வாஷிங்டன்


ADDED : ஜன 28, 2026 10:02 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 28, 2026 10:02 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெங்களூரு: காயத்தில் இருந்து மீண்ட வாஷிங்டன் சுந்தர் பேட்டிங் பயிற்சியை துவக்கினார்.

இந்திய அணியின் சுழற்பந்து வீச்சு, 'ஆல் ரவுண்டர்' வாஷிங்டன் சுந்தர் 26. தமிழகத்தை சேர்ந்தவர். நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில், இடது கீழ் விலா பகுதியில் லேசான எலும்பு முறிவு ஏற்பட்டது. இதனால் நியூசிலாந்து தொடரில் இருந்து முழுவதுமாக வெளியேறினார்.

இப்போதுள்ள நிலையில் 'டி-20' உலக கோப்பை தொடர் துவங்கும் முன் (பிப். 7) வாஷிங்டன் மீண்டு வருவது இயலாத காரியம் எனத் தெரிகிறது. எனினும் மாற்று வீரரை சேர்க்க இந்திய கிரிக்கெட் போர்டு அவசரம் காட்டவில்லை.

இதனிடையே பெங்களூரு தேசிய கிரிக்கெட் அகாடமியில் நேற்று வாஷிங்டன், பேட்டிங் பயிற்சியை துவக்கினார். விலா பகுதியில் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us