தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/கிரிக்கெட்/இந்திய அணியில் ரோகித், கோலி: வெஸ்ட் இண்டீஸ் தொடரில் இடம்

இந்திய அணியில் ரோகித், கோலி: வெஸ்ட் இண்டீஸ் தொடரில் இடம்

இந்திய அணியில் ரோகித், கோலி: வெஸ்ட் இண்டீஸ் தொடரில் இடம்


ADDED : செப் 16, 2026 09:49 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 16, 2026 09:49 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுடில்லி: வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணியில் ரோகித், கோலி இடம் பெற்றனர். ருதுராஜும் வாய்ப்பு பெற்றார்.

இந்தியா வரும் வெஸ்ட் இண்டீஸ் அணி, 3 ஒருநாள் (செப். 27, 30, அக். 3), 5 'டி-20' (அக். 6, 9, 11, 14, 17) கொண்ட போட்டித் தொடரில் பங்கேற்கிறது. இதற்கான இந்திய அணி நேற்று தேர்வு செய்யப்பட்டது. கேப்டனாக சுப்மன் கில் தொடர்கிறார்.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சீனியர்கள் ரோகித் சர்மா, கோலி சேர்க்கப்பட்டனர். வெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் தொடர் நடக்கும் நேரத்தில் ஷ்ரேயஸ் ஐயர் தலைமையிலான 'டி-20' அணி, ஆசிய விளையாட்டில் (ஜப்பான், செப்.19-அக்.4) பங்கேற்கும்.

இதனால் ஷ்ரேயசிற்குப் பதில், ஒருநாள் போட்டிக்கு துணை கேப்டனாக 'கீப்பர்-பேட்டர்' கே.எல்.ராகுல் நியமிக்கப்பட்டார். பேட்டராக ருதுராஜ், இரண்டாவது விக்கெட் கீப்பராக துருவ் ஜுரல் இடம் பிடித்தனர். வேகப்பந்து வீச்சில் முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, குர்னுார் பிரார் தேர்வு செய்யப்பட்டனர்.

ஒருநாள் அணி

சுப்மன் கில் (கேப்டன்), ராகுல் (துணைக் கேப்டன்), ரோகித் சர்மா, கோலி, ருதுராஜ், துருவ் ஜுரெல், நிதிஷ் குமார், ஜடேஜா, குல்தீப் யாதவ், பிரசித் கிருஷ்ணா, குர்னுார் பிரார், முகமது சிராஜ், அகிப் நபி, ஜெய்ஸ்வால், நமன் திர்.

'டி-20' அணி

ஷ்ரேயஸ் ஐயர் (கேப்டன்), அபிஷேக், சஞ்சு சாம்சன், வைபவ் சூர்யவன்ஷி, இஷான் கிஷான், திலக் வர்மா, ஷிவம் துபே, குல்தீப், அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், ரவி பிஷ்னோய், நிதிஷ் குமார், அர்ஷ்தீப், பிரின்ஸ், மயங்க் யாதவ்.

ரிஷாப் கேப்டன்

ரஞ்சி கோப்பை சாம்பியன் ஜம்மு-காஷ்மீர், 'ரெஸ்ட் ஆப் இந்தியா' அணிகள் மோதும் இரானி கோப்பை போட்டி அக்.1-5ல் ஸ்ரீநகரில் நடக்க உள்ளது. இதற்கான ரெஸ்ட் ஆப் இந்தியா அணி கேப்டனாக ரிஷாப் பன்ட் நியமிக்கப்பட்டார்.

அணி விபரம்:

ரிஷாப் பன்ட் (கேப்டன்), சனத் சங்வான், ஷிகர் மோகன், சுதிப் ஹராமி, சர்பராஸ் கான், ஸ்மரன், மானவ் சுதார், சரண்ஸ், ஆகாஷ் தீப் (உடற்தகுதியை பொறுத்து), முகேஷ் குமார், முகேஷ் சவுத்ரி, ஆர்யன் ஜுயல், ஆர்யன் பாண்டே, அனுகுல் ராய், ஆயுஷ் தோசேஜா.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us