தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/கிரிக்கெட்/இங்கிலாந்து அபார வெற்றி

இங்கிலாந்து அபார வெற்றி

இங்கிலாந்து அபார வெற்றி


ADDED : மே 30, 2025 10:44 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 30, 2025 10:44 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பர்மிங்காம்: முதல் ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி 238 ரன்னில் வென்றது.

இங்கிலாந்து சென்றுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி 3 போட்டி கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி பர்மிங்காமில் நடந்தது. இங்கிலாந்து அணிக்கு முதன் முறையாக ஹாரிக் புரூக் கேப்டனாக களமிறங்கினார். 'டாஸ்' வென்ற வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ஷாய் ஹோப், பீல்டிங் தேர்வு செய்தார்.

இங்கிலாந்து அணிக்கு ஸ்மித் (37), டக்கெட் (60) ஜோடி சூப்பர் துவக்கம் கொடுத்தது. அடுத்து வந்த ஜோ ரூட் (57), ஹாரி புரூக் (58) என இருவரும் அரைசதம் அடித்தனர். பட்லர் 37, வில் ஜாக்ஸ் 39 ரன் எடுத்தனர். பெத்தெல் 53 பந்தில் 82 ரன் எடுத்தார். இங்கிலாந்து அணி 50 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 400 ரன் குவித்தது. ஒருநாள் அரங்கில் இங்கிலாந்து அணி 400 ரன்னுக்கும் மேல் 6வது முறையாக எடுத்தது. ஜேடன் சீலஸ் அதிகபட்சம் 4 விக்கெட் சாய்த்தார்.

எளிய வெற்றி

இமாலய இலக்கைத் துரத்திய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு பிரண்டன் கிங் (10), ஜஸ்டின் (4) ஏமாற்றினர். 'மிடில் ஆர்டரில்' கீசே கார்டி (22), ஹோப் (25), ஆன்ட்ரூ (8), ஆமிர் (14), சேஸ் (9) நிலைக்கவில்லை. வெஸ்ட் இண்டீஸ் அணி 26.2 ஓவரில் 162 ரன்னுக்கு சுருண்டு தோற்றது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us