தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/கிரிக்கெட்/வேகமாக வென்றது இங்கிலாந்து * கோப்பை கைப்பற்றி அசத்தல்

வேகமாக வென்றது இங்கிலாந்து * கோப்பை கைப்பற்றி அசத்தல்

வேகமாக வென்றது இங்கிலாந்து * கோப்பை கைப்பற்றி அசத்தல்


ADDED : ஜூன் 04, 2025 10:42 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 04, 2025 10:42 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

லண்டன்: இங்கிலாந்து சென்றுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி 3 போட்டி கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் இரு போட்டியில் வென்ற இங்கிலாந்து அணி, 2-0 என தொடரை கைப்பற்றியது. மூன்றாவது போட்டி லண்டன், ஓவல் மைதானத்தில் நடந்தது.

இதற்காக இரு அணி வீரர்கள் வந்த பஸ் போக்குவரத்து நெரிசலில் சிக்கியது. உடனே இங்கிலாந்து அணியினர், சைக்கிளில் மைதானம் வந்தனர். வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் தாமதமாக மைதானம் வந்தனர். 30 நிமிடம் தாமதமாக துவங்கிய போட்டி மழையால் 40 ஓவர்கள் கொண்டதாக மாற்றப்பட்டது. முதலில் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 40 ஓவரில் 251/9 ரன் எடுத்தது.

அடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணியின் இலக்கு, 'டக்வொர்த் லீவிஸ்' விதிப்படி 40 ஓவரில் 246 என மாற்றப்பட்டது. ஸ்மித் 64 ரன் (28 பந்து, ஸ்டிரைக் ரேட் 228.57), டக்கெட் 58 ரன் எடுத்து கைகொடுத்தனர். ஜோ ரூட் 44 ரன் எடுத்தார். இங்கிலாந்து அணி 29.4 ஓவரில் 246/3 ரன் எடுத்து, 7 விக்கெட்டில் வெற்றி பெற்றது. தொடரை 3-0 என கைப்பற்றியது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us