/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
நியூசிலாந்து 'ஹாட்ரிக்' வெற்றி * வெஸ்ட் இண்டீஸ் ஏமாற்றம்
/
நியூசிலாந்து 'ஹாட்ரிக்' வெற்றி * வெஸ்ட் இண்டீஸ் ஏமாற்றம்
நியூசிலாந்து 'ஹாட்ரிக்' வெற்றி * வெஸ்ட் இண்டீஸ் ஏமாற்றம்
நியூசிலாந்து 'ஹாட்ரிக்' வெற்றி * வெஸ்ட் இண்டீஸ் ஏமாற்றம்
ADDED : நவ 22, 2025 10:34 PM

ஹாமில்டன்: சாப்மென் அரைசதம் கைகொடுக்க, மூன்றாவது ஒரு நாள் போட்டியில் நியூசிலாந்து, 4 விக்கெட்டில் வெற்றி பெற்றது.
நியூசிலாந்து சென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி, 3 போட்டி கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்றது. 3வது, கடைசி போட்டி நேற்று ஹாமில்டனில் நடந்தது. 'டாஸ்' வென்ற வெஸ்ட் இண்டீஸ் பேட்டிங் தேர்வு செய்தது.
கேம்பெல் (26), அக்கீம் (17) ஜோடி சுமார் துவக்கம் தந்தது. கீசி கார்டி (0), கேப்டன் ஷாய் ஹோப் (16), ரூதர்போர்டு (19) என யாரும் பெரிய ஸ்கோர் எடுக்கவில்லை. ராஸ்டன் சேஸ் அதிகபட்சம் 38 ரன் எடுத்தார்.
வெஸ்ட் இண்டீஸ் அணி 36.2 ஓவரில் 161 ரன்னுக்கு சுருண்டது. காரி பியர்ரே (22) அவுட்டாகாமல் இருந்தார். ஹென்றி அதிகபட்சம் 4 விக்கெட் சாய்த்தார்.
சாப்மென் அரைசதம்
நியூசிலாந்து அணிக்கு ரச்சின் ரவிந்திரா (14), கான்வே (11) ஜோடி துவக்கத்தில் ஏமாற்றியது. வில் யங் (3), லதாம் (10), கேப்டன் சான்ட்னர் (9) கைவிட்டனர். அரைசதம் அடித்த சாப்மென், 63 பந்தில் 64 ரன் எடுத்து வெற்றிக்கு கைகொடுத்தார்.
நியூசிலாந்து அணி 30.3 ஓவரில் 162/6 ரன் எடுத்து, வெற்றி பெற்றது. பிரேஸ்வெல் (40) அவுட்டாகாமல் இருந்தார். ஏற்கனவே முதல் இரு போட்டியில் அசத்திய நியூசிலாந்து, 'ஹாட்ரிக்' வெற்றியுடன் தொடரை 3-0 என முழுமையாக கைப்பற்றியது.

