/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
நியூசிலாந்து பவுலர்கள் அபாரம் * வெஸ்ட் இண்டீஸ் அணி திணறல்
/
நியூசிலாந்து பவுலர்கள் அபாரம் * வெஸ்ட் இண்டீஸ் அணி திணறல்
நியூசிலாந்து பவுலர்கள் அபாரம் * வெஸ்ட் இண்டீஸ் அணி திணறல்
நியூசிலாந்து பவுலர்கள் அபாரம் * வெஸ்ட் இண்டீஸ் அணி திணறல்
ADDED : டிச 10, 2025 10:30 PM

வெலிங்டன்: வெலிங்டன் டெஸ்டில் நியூசிலாந்து பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாத வெஸ்ட் இண்டீஸ் அணி, முதல் இன்னிங்சில் 205 ரன்னில் ஆல் அவுட்டானது.
நியூசிலாந்து சென்றுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி, மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. கிறைஸ்ட்சர்ச்சில் நடந்த முதல் டெஸ்டில் நியூசிலாந்து வென்றது. இரண்டாவது டெஸ்ட் நேற்று வெலிங்டனில் துவங்கியது. 'டாஸ்' வென்ற நியூசிலாந்து அணி கேப்டன் டாம் லதாம், பீல்டிங் தேர்வு செய்தார்.
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு பிரண்டன் கிங், கேம்பெல் ஜோடி நல்ல துவக்கம் கொடுத்தது. முதல் விக்கெட்டுக்கு 16.4 ஓவரில் 66 ரன் சேர்த்த போது, பிரண்டன் (33), டிக்னெர் பந்தில் அவுட்டானார். தொடர்ந்து மிரட்டிய டிக்னெர், கவேமை 'டக்' அவுட்டாக்கினார். கேம்பெல் 44 ரன்னில் அவுட்டாக, ஷாய் ஹோப் தன் பங்கிற்கு 48 ரன் எடுத்து திரும்பினார்.
கேப்டன் ராஸ்டன் சேஸ், 29 ரன் எடுத்த போது, டிக்னெர் பந்தில் போல்டானார். பின் வரிசையில், கடந்த டெஸ்டில் இரட்டை சதம் அடித்த கிரீவ்ஸ் (13), டெவின் (16) நிலைக்கவில்லை.
மற்றவர்கள் ஒற்றை இலக்க ரன்னில் வீழ்ந்தனர். வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்சில் 205 ரன்னில் ஆல் அவுட்டானது. நியூசிலாந்து சார்பில் டிக்னெர் 4, மைக்கேல் 3 விக்கெட் சாய்த்தனர்.
பின் களமிறங்கிய நியூசிலாந்து அணி முதல் நாள் முடிவில், முதல் இன்னிங்சில் 24/0 ரன் எடுத்து, 181 ரன் பின் தங்கி இருந்தது. லதாம் (7), கான்வே (16) அவுட்டாகாமல் இருந்தனர்.
டிக்னெர் காயம்
நேற்று போட்டியின் 67 வது ஓவரை மைக்கேல் வீசினார். இதில் இம்லச் அடித்த பந்தை (66.2) பவுண்டரி எல்லையில் தடுக்க பாய்ந்தார் டிக்னெர். அப்போது இவரது இடது தோள்பட்டை விலகியது. வலியால் துடித்த இவர், 'ஸ்டிரெச்சர்' உதவியால் வெளியேறினார்.

