/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
இந்திய பெண்கள் ஏமாற்றம் * மந்தனா அரைசதம் வீண்
/
இந்திய பெண்கள் ஏமாற்றம் * மந்தனா அரைசதம் வீண்
ADDED : டிச 17, 2024 11:20 PM

நவி மும்பை: வெஸ்ட் இண்டீசிற்கு எதிரான இரண்டாவது 'டி-20' போட்டியில் இந்திய பெண்கள் அணி, 9 விக்கெட்டில் தோல்வியடைந்தது.
இந்தியா வந்துள்ள வெஸ்ட் இண்டீஸ் பெண்கள் அணி 3 போட்டி கொண்ட 'டி-20' தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டியில் இந்தியா வென்றது. இரண்டாவது போட்டி நேற்று நவி மும்பையில் நடந்தது. 'டாஸ்' வென்ற வெஸ்ட் இண்டீஸ் பீல்டிங் தேர்வு செய்தது.
மந்தனா அபாரம்
இந்திய அணிக்கு கேப்டன் ஸ்மிருதி மந்தனா, உமா (4) ஜோடி சுமார் துவக்கம் தந்தது. ஜெமிமா (13), ராகவி (5) நிலைக்கவில்லை. மந்தனா அரைசதம் விளாசினார். இவர் 41 பந்தில் 62 ரன் எடுத்து அவுட்டானார். தீப்தி (17) ரன் அவுட்டானார். ரிச்சா 17 பந்தில் 32 ரன் எடுத்து உதவினார்.
சஜனா (2), ராதா (7), சைமா (9) ஒற்றை இலக்க ரன்னில் அவுட்டாகினர். இந்திய அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 159 ரன் எடுத்தது. திதாஸ் (1), ரேணுகா (4) அவுட்டாகாமல் இருந்தனர். வெஸ்ட் இண்டீஸ் சார்பில் சினெல்லே, டாட்டின், ஹேலே, அபி தலா 2 விக்கெட் சாய்த்தனர்.
அடுத்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு குயனா (38), ஹேலே ஜோடி மின்னல் வேக துவக்கம் கொடுத்தது. ஹேலே அரைசதம் அடிக்க, வெஸ்ட் இண்டீஸ் அணி 15.4 ஓவரில் 160/1 ரன் எடுத்து வெற்றி பெற்றது. ஹேலே (85), ஷிமெய்ன் (29) அவுட்டாகாமல் இருந்தனர்.
மூன்றாவது இடம்
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் சார்பில் ஒருநாள், சர்வதேச 'டி-20' போட்டியில் சிறந்து விளங்கும் வீராங்கனைகளுக்கான தரவரிசை பட்டியல் வெளியானது. இந்த இருவகை கிரிக்கெட்டிலும், பேட்டர் தரவரிசையில் இந்திய துவக்க வீராங்கனை ஸ்மிருதி மந்தனா, 'நம்பர்-3' இடம் பிடித்தார். சமீபத்தில் முடிந்த ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக ஒருநாள் தொடரில் 54, 105 ரன் விளாசினார்.
2 இடம் பின்தங்கிய இந்திய அணி கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர், 13வது, 6 இடம் முன்னேறிய ஜெமிமா 15வது இடங்களில் உள்ளனர்.