தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/கிரிக்கெட்/அபிஷேக் சர்மாவுக்கு கவுரவம் * விஸ்டன் விருதில் இந்தியா ஆதிக்கம்

அபிஷேக் சர்மாவுக்கு கவுரவம் * விஸ்டன் விருதில் இந்தியா ஆதிக்கம்

அபிஷேக் சர்மாவுக்கு கவுரவம் * விஸ்டன் விருதில் இந்தியா ஆதிக்கம்


ADDED : ஏப் 14, 2026 10:59 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 14, 2026 10:59 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

லண்டன்: 'விஸ்டன்' இதழ் விருதில் இந்திய நட்சத்திரங்கள் ஆதிக்கம் செலுத்தினர். 9ல் 7 விருதை தட்டிச் சென்றனர்.

பிரபல கிரிக்கெட் இதழ் 'விஸ்டன்'. சிறப்பாக செயல்பட்ட நட்சத்திரங்கள் இந்த இதழில் இடம் பெறுவர். 2025ல் விருது பெற்றவர் விபரம் வெளியானது. இதில், இந்திய பெண்கள் அணியின் 'ஆல் ரவுண்டர்' தீப்தி சர்மா 28, சிறந்த வீராங்கனையாக தேர்வு செய்யப்பட்டார்.

கடந்த ஆண்டு நடந்த பெண்களுக்கான உலக கோப்பை தொடரில் இவர், அதிக விக்கெட் சாய்த்தவர்களில் முதலிடம் பிடித்த தீப்தி (22 விக்கெட்), பேட்டிங்கில் 215 ரன் எடுத்து இருந்தார். இது இந்திய அணி முதன் முறையாக உலக கோப்பை கைப்பற்ற கைகொடுத்தது.

சபாஷ் சுப்மன்

இந்திய இளம் வீரர் அபிஷேக் சர்மா 25, சிறந்த 'டி-20' வீரராக தேர்வானார். இவர் கடந்த ஆண்டில் 21 போட்டியில் 859 ரன் குவித்தார்.

2025ல் எட்ஜ்பாஸ்டனில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்டில் சுப்மன் கில், 269, 161 ரன் எடுத்தார். இது கடந்த ஆண்டின் சிறந்த டெஸ்ட் செயல்பாடாக தேர்வானது.

நான்கு வீரர்கள்

தவிர, கடந்த ஆண்டின் சிறந்த 5 வீரர்களில், 4 பேர் இந்தியர்கள். இங்கிலாந்து மண்ணில் நடந்த டெஸ்ட் தொடரில் பேட்டிங்கில் அசத்திய இந்திய அணி கேப்டன் சுப்மன் கில் (754 ரன்), கால் விரல் எலும்பு முறிவுடன் விளையாடிய ரிஷாப் பன்ட் (479), 'வேகத்தில்' மிரட்டிய முகமது சிராஜ் (23 விக்.,), ஆல் ரவுண்டர் ஜடேஜா (516 ரன், 7 விக்.,), சிறந்த வீரர்களாக தேர்வாகினர். 5வது வீரராக இங்கிலாந்து பேட்டர் ஹசீப் ஹமீது தேர்வானார்.

2025ல் சிறந்த வீரராக ஆஸ்திரேலிய அணி வேகப்பந்து வீச்சாளர் மிட்சல் ஸ்டார்க் தேர்வு செய்யப்பட்டார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us