/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
'உலகை' வென்றால் ரூ. 19.6 கோடி * பெண்கள் 'டி-20' போட்டியில்...
/
'உலகை' வென்றால் ரூ. 19.6 கோடி * பெண்கள் 'டி-20' போட்டியில்...
'உலகை' வென்றால் ரூ. 19.6 கோடி * பெண்கள் 'டி-20' போட்டியில்...
'உலகை' வென்றால் ரூ. 19.6 கோடி * பெண்கள் 'டி-20' போட்டியில்...
ADDED : செப் 17, 2024 10:51 PM

துபாய்: பெண்கள் 'டி-20' உலக கோப்பை வெல்லும் அணிக்கு ரூ. 19.6 கோடி பரிசு தரப்பட உள்ளது.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) சார்பில் பெண்களுக்கான 'டி-20' உலக கோப்பை கிரிக்கெட் தொடர் அக். 3-20ல் ஐக்கிய அரபு எமிரேட்சில் நடக்க உள்ளது.
10 அணிகள் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு போட்டி லீக் முறையில் நடக்கும். ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரு இடம் பெறும் அணிகள் அரையிறுதிக்கு (அக். 17, 18) செல்லும். 22 போட்டி முடிவில், அக். 20ல் துபாயில் பைனல் நடக்கும்.
இந்திய அணி 'ஏ' பிரிவில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், இலங்கை அணிகளுடன் இடம் பெற்றுள்ளது. தனது முதல் போட்டியில் இந்திய அணி, அக். 4ல் நியூசிலாந்தை சந்திக்கிறது. அக். 6ல் பாகிஸ்தானுடன் மோதுகிறது.
இதனிடையே பெண்கள் 'டி-20' உலக கோப்பை தொடருக்கான பரிசுத் தொகை விவரம் நேற்று வெளியானது. மொத்த பரிசுத் தொகை கடந்த ஆண்டினை விட 225 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதன் படி சமீபத்தில் சாம்பியன் ஆன இந்திய ஆண்கள் அணிக்கு (ரூ. 20.5 கோடி) நிகராக, கோப்பை வெல்லும் பெண்கள் அணிக்கு ரூ. 19.6 கோடி தரப்பட உள்ளது. 2023ல் சாம்பியன் ஆன ஆஸ்திரேலிய பெண்கள் அணிக்கு ரூ. 8.4 கோடி தரப்பட்டு இருந்தது.
இரண்டாவது இடம் பெறும் அணி ரூ. 10 கோடி பெறும். அரையிறுதியில் தோற்கும் இரு அணிகளுக்கு தலா ரூ. 5.7 கோடி கிடைக்கும்.
தவிர லீக் சுற்றில் பெறும் ஒவ்வொரு வெற்றிக்கும் ரூ. 26 லட்சம் தரப்படும். அரையிறுதிக்கு முன்னேறாத 6 அணிகள், பெறும் இடத்துக்கு ஏற்ப, ரூ. 11.3 கோடி பிரித்து வழங்கப்படும்.
ரூ. 67 கோடி
பெண்கள் 'டி-20' உலக கோப்பையின் மொத்த பரிசுத் தொகை ரூ. 67 கோடி. கடந்த ஆண்டினை (ரூ. 20.5 கோடி) விட, 225 சதவீதம் அதிகம்.