தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/கிரிக்கெட்/எல்லை மீறும் 'ரசிகர்கள் போர்': பாண்ட்யாவுக்கு அஷ்வின் ஆதரவு

எல்லை மீறும் 'ரசிகர்கள் போர்': பாண்ட்யாவுக்கு அஷ்வின் ஆதரவு

எல்லை மீறும் 'ரசிகர்கள் போர்': பாண்ட்யாவுக்கு அஷ்வின் ஆதரவு


ADDED : மார் 30, 2024 10:36 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 30, 2024 10:36 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுடில்லி: ''கிரிக்கெட்டில் சினிமா கலாசாரம் தேவையில்லாதது. பாண்ட்யா விஷயத்தில் ரசிகர்கள் போர் மோசமான நிலையை எட்டியுள்ளது,'' என அஷ்வின் எச்சரித்தார்.

ஐ.பி.எல்., அரங்கில் மும்பை அணிக்கு 5 முறை சாம்பியன் பட்டம் வென்று தந்தவர் ரோகித் சர்மா. இம்முறை மும்பை அணி நிர்வாகம் திடீரென மாற்றம் செய்தது. குஜராத் அணிக்கு கோப்பை வென்று தந்த ஹர்திக் பாண்ட்யாவை புதிய கேப்டனாக நியமித்தது. தற்போது பாண்ட்யா தலைமையில் ரோகித் விளையாடுகிறார். இது, ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது. ஆமதாபாத்தில் நடந்த குஜராத்திற்கு எதிரான போட்டியில் பாண்ட்யாவுக்கு எதிராக கோஷம் எழுப்பினர். அடுத்து ஐதராபாத்தில் நடந்த போட்டியிலும்(எதிர் ஐதராபாத் அணி) இவருக்கு எதிராக குரல் கொடுத்தனர். முதல் இரு போட்டியிலும் மும்பை தோற்ற நிலையில், ரசிகர்களின் செயல் கேப்டன் பாண்ட்யாவுக்கு கூடுதல் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து ஐ.பி.எல்., ராஜஸ்தான் அணிக்காக விளையாடும் இந்திய அணியின் அனுபவ 'ஸ்பின்னர்' அஷ்வின் கூறியது: ரசிகர்கள் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும். இரு வீரர்களும் இந்தியாவை சேர்ந்தவர்கள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். ரசிகர்கள் போர் இந்த அளவுக்கு மோசமான நிலையை எட்டியிருக்கக் கூடாது. கிரிக்கெட்டில் சினிமா கலாசராம் புகுந்துவிட்டது. இந்தியாவில் மட்டும் தான் இப்படி நடக்கிறது. இங்கிலாந்தில் ஜோ ரூட், கிராலே ரசிகர்கள் சண்டையிட்டு கொள்கின்றனரா அல்லது ஜோ ரூட், ஜோஸ் பட்லர் ரசிகர்கள் மோதிக் கொள்கின்றனரா... ஆஸ்திரலேியாவில் கம்மின்ஸ், ஸ்டீவ் ஸ்மித் ரசிகர்கள் மோதிக் கொள்வதை பார்த்திருக்கிறீர்களா...?

தலைமை மாற்றம்

கேப்டன் மாற்றம் விளையாட்டில் சகஜம். கடந்த காலத்தில் சச்சின் கீழ் கங்குலி விளையாடினார். அடுத்து கங்குலி தலைமையில் சச்சின் களமிறங்கினார். இருவரும் டிராவிட் தலைமையில் விளையாடினர். மூவரும் கும்ளே தலைமையில் போட்டிகளில் பங்கேற்றனர். இந்த ஜாம்பவான்கள் அனைவருமே தோனியின் தலைமையில் விளையாடினர். தோனியே ஒரு கட்டத்தில் கோலியின் தலைமையை ஏற்று விளையாடினார்.

சினிமாவுடன் ஒப்பீடு

ரசிகர்கள் மற்றவர் மீது பழி சொல்வதை தவிர்த்து, தங்களது தவறுகளை திருத்திக் கொள்ள வேண்டும். விளையாட்டு என்பது நிஜமானது. கதை, வசனம் எழுதி நடப்பதில்லை. களத்தில் உண்மையான வீரர்கள் விளையாடுகின்றனர். இவர்களுக்கு உணர்ச்சிகள் உண்டு. வீரர்களை 'ஹீரோ'வாக கொண்டாடுகிறோம் என்பதற்காக, விளையாட்டை சினிமாவுடன் ஒப்பிடக் கூடாது. உங்களுக்கு பிடித்த வீரர், அணியை கொண்டாட உரிமை உண்டு. அதே நேரத்தில் இன்னொரு வீரரை அவமதிப்பு செய்யக் கூடாது. இந்த தவறு நம் நாட்டில் இருந்து காணாமல் போக வேண்டும்.

இவ்வாறு அஷ்வின் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us