/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
தீப்தி சர்மா விடுவிப்பு: உ.பி., அணியில் இருந்து
/
தீப்தி சர்மா விடுவிப்பு: உ.பி., அணியில் இருந்து
ADDED : நவ 06, 2025 09:46 PM

புதுடில்லி: பெண்கள் பிரிமியர் லீக் தொடருக்கான உ.பி., அணியில் இருந்து தீப்தி சர்மா விடுவிக்கப்பட்டார்.
இந்தியாவில், பெண்களுக்கான பிரிமியர் லீக் ('டி-20') 4வது சீசன் அடுத்த ஆண்டு நடக்கவுள்ளது. மொத்தம் 5 அணிகள் பங்கேற்கின்றன. இதற்காக வீராங்கனைகளை தேர்வு செய்யும் 'மெகா' ஏலம் வரும் நவ. 27ல் டில்லியில் நடக்கிறது. ஒவ்வொரு அணிகளும், தக்கவைக்கப்பட்ட வீராங்கனைகளின் பட்டியலை வெளியிட்டன.
உ.பி., அணியில் இருந்து இந்திய 'ஆல்-ரவுண்டர்' தீப்தி சர்மா விடுவிக்கப்பட்டார். கடந்த ஆண்டு நடந்த பிரிமியர் லீக் தொடரில், சிறந்த வீராங்கனைக்கான தொடர் நாயகி விருது வென்றிருந்தார். சமீபத்திய உலக கோப்பையிலும் (50 ஓவர்) 'ஆல்-ரவுண்டராக' (215 ரன், 22 விக்கெட்) அசத்திய இவர், தொடர் நாயகியாக தேர்வானார். உ.பி., அணி ஷ்வேதா ஷெராவத்தை (ரூ. 50 லட்சம்) மட்டும் தக்கவைத்துக் கொண்டது.
சமீபத்திய உலக கோப்பையில் (50 ஓவர்) 571 ரன் குவித்த தென் ஆப்ரிக்க கேப்டன் லாரா வால்வார்ட், குஜராத் அணியில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
தக்கவைக்கப்பட்ட வீராங்கனைகள்
மும்பை: ஹர்மன்பிரீத் கவுர், அமன்ஜோத் கவுர், கமலினி (இந்தியா), நாட்-சிவர் புருன்ட் (இங்கிலாந்து), ஹேலி மாத்யூஸ் (வெ.இண்டீஸ்)
பெங்களூரு: ஸ்மிருதி மந்தனா, ரிச்சா கோஷ், ஷ்ரேயங்கா பாட்டீல் (இந்தியா), எல்லிஸ் பெர்ரி (ஆஸி.,)
குஜராத்: ஆஷ்லி கார்ட்னர், பெத் மூனே (ஆஸி.,)
உ.பி.,: ஷ்வேதா ஷெராவத் (இந்தியா)
டில்லி: ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஷைபாலி வர்மா, நிக்கி பிரசாத் (இந்தியா), அனாபெல் சுதர்லாந்து (ஆஸி.,), மரிஜான்னே காப் (தெ.ஆப்.,).

