தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/கிரிக்கெட்/பெங்களூரு அணியை வீழ்த்தியது டில்லி

பெங்களூரு அணியை வீழ்த்தியது டில்லி

பெங்களூரு அணியை வீழ்த்தியது டில்லி


ADDED : ஜன 24, 2026 11:07 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 24, 2026 11:07 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வதோதரா: பெண்கள் பிரிமியர் லீக் போட்டியில் ஏமாற்றிய பெங்களூரு அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் டில்லியிடம் வீழ்ந்தது.

குஜராத்தின் வதோதராவில் உள்ள கோடாம்பி மைதானத்தில் நடந்த பெண்கள் பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடருக்கான லீக் போட்டியில் பெங்களூரு, டில்லி அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற டில்லி அணி கேப்டன் ஜெமிமா ரோட்ரிக்ஸ் 'பீல்டிங்' தேர்வு செய்தார்.

பெங்களூரு அணிக்கு கேப்டன் ஸ்மிருதி மந்தனா (38), ராதா யாதவ் (18) ஓரளவு கைகொடுத்தனர். பெங்களூரு அணி 20 ஓவரில் 109 ரன்னுக்கு 'ஆல்-அவுட்' ஆனது. டில்லி சார்பில் நந்தினி 3 விக்கெட் கைப்பற்றினார்.

சுலப இலக்கை விரட்டிய டில்லி அணிக்கு ஷைபாலி வர்மா (16), கேப்டன் ஜெமிமா (24) நம்பிக்கை தந்தனர். பின் இணைந்த லாரா வால்வார்ட் (42*), மரிஜான் காப் (19*) கைகொடுக்க, டில்லி அணி 15.4 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 111 ரன் எடுத்து வெற்றி பெற்றது.

ஏற்கனவே 'பிளே-ஆப்' சுற்றுக்குள் நுழைந்த பெங்களூரு அணி (10 புள்ளி), இந்த சீசனில் முதல் தோல்வியை பெற்றது. மூன்றாவது வெற்றியை பதிவு செய்த டில்லி அணி (6 புள்ளி) 2வது இடத்துக்கு முன்னேறியது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us