ADDED : மே 24, 2026 11:32 PM

கொல்கட்டா: டில்லி அணி 40 ரன் வித்தியாசத்தில் கொல்கட்டாவை வீழ்த்தியது.
கொல்கட்டா, ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்த கிரிக்கெட் லீக் தொடருக்கான கடைசி லீக் போட்டியில், ஏற்கனவே 'பிளே-ஆப்' வாய்ப்பை இழந்த கொல்கட்டா, டில்லி அணிகள் ஆறுதல் வெற்றிக்காக மோதின. 'டாஸ்' வென்ற டில்லி அணி கேப்டன் ரஹானே, 'பீல்டிங்' தேர்வு செய்தார்.
ராகுல் அபாரம்: டில்லி அணிக்கு அபிஷேக் போரெல், ராகுல் ஜோடி நல்ல துவக்கம் தந்தது. முதல் விக்கெட்டுக்கு 40 ரன் சேர்த்த போது சவுரப் துபே பந்தில் போரெல் (22) அவுட்டானார். சுனில் நரைன் வீசிய 8வது ஓவரில் ஒரு சிக்சர், ஒரு பவுண்டரி அடித்தார் ராகுல். சுனில் நரைன் 'சுழலில்' சாஹில் பராக் (24) சிக்கினார். அபாரமாக ஆடிய ராகுல், 25 பந்தில் அரைசதம் எட்டினார். அனுகுல் ராய் பந்தில் ராகுல் (60 ரன், 4X6, 5X4) அவுட்டாகினர்.
கேப்டன் அக்சர் படேல் (39) ஓரளவு கைகொடுத்தார். கார்த்திக் தியாகி வீசிய 19வது ஓவரில் ஒரு பவுண்டரி, ஒரு சிக்சர் அடித்தார் அஷுதோஷ் சர்மா. சவுரப் துபே வீசிய கடைசி ஓவரில் 2 சிக்சர் விளாசிய மில்லர் (28) நம்பிக்கை தந்தார்.
டில்லி அணி 20 ஓவரில் 203/5 ரன் எடுத்தது. அஷுதோஷ் (18) அவுட்டாகாமல் இருந்தார்.
ரஹானே அரைசதம்: சவாலான இலக்கை விரட்டிய கொல்கட்டா அணிக்கு நிகிடி தொல்லை தந்தார். இவரது 'வேகத்தில்' ஆலன் (20), மணிஷ் பாண்டே (25) வெளியேறினர். குல்தீப் யாதவ் 'சுழலில்' கிரீன் (2), ரிங்கு சிங் (0) சிக்கினர். பொறுப்பாக ஆடிய கேப்டன் அஜின்கியா ரஹானே, 39 பந்தில் 69 ரன் (4X6, 4X4) எடுத்தார். ராவ்மன் பாவெல் (29) 'ரன்-அவுட்' ஆனார். தேஜஸ்வி (1) ஏமாற்றினார். ஸ்டார்க் வீசிய 18வது ஓவரில் அனுகுல் ராய் (9), கார்த்திக் தியாகி (0) அவுட்டாகினர். நிகிடி பந்தில் வருண் (5) ஆட்டமிழந்தார்.
கொல்கட்டா அணி 18.4 ஓவரில் 163 ரன்னுக்கு சுருண்டு தோல்வியடைந்தது. சவுரப் துபே (4) அவுட்டாகாமல் இருந்தார். டில்லி அணி சார்பில் குல்தீப், நிகிடி தலா 3 விக்கெட் சாய்த்தனர்.
