/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
டில்லி அணிக்கு 4வது வெற்றி: ராகுல் அரைசதம் விளாசல்
/
டில்லி அணிக்கு 4வது வெற்றி: ராகுல் அரைசதம் விளாசல்
டில்லி அணிக்கு 4வது வெற்றி: ராகுல் அரைசதம் விளாசல்
டில்லி அணிக்கு 4வது வெற்றி: ராகுல் அரைசதம் விளாசல்
ADDED : ஏப் 10, 2025 11:32 PM

பெங்களூரு: ராகுல் 93 ரன் விளாச, டில்லி அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் தொடர்ந்து 4வது வெற்றியை பதிவு செய்தது. பெங்களூரு அணி ஏமாற்றியது.
பெங்களூரு, சின்னசாமி மைதானத்தில் நடந்த பிரிமியர் லீக் போட்டியில் பெங்களூரு, டில்லி அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற டில்லி அணி கேப்டன் அக்சர் படேல், 'பவுலிங்' தேர்வு செய்தார்.
சால்ட் விளாசல்: பெங்களூரு அணிக்கு பில் சால்ட், விராத் கோலி ஜோடி நல்ல துவக்கம் கொடுத்தது. ஸ்டார்க் வீசிய 3வது ஓவரில் 2 சிக்சர், 3 பவுண்டரி விளாசினார் சால்ட். இந்த ஓவரில் 30 ரன் கிடைத்தது. முதல் விக்கெட்டுக்கு 61 ரன் சேர்த்த போது சால்ட் (37) 'ரன்-அவுட்' ஆனார். தேவ்தத் படிக்கல் (1) சோபிக்கவில்லை. கோலி 22 ரன்னில் ஆட்டமிழந்தார். லிவிங்ஸ்டன் (4) ஏமாற்றினார். குல்தீப் யாதவ் 'சுழலில்' ஜிதேஷ் சர்மா (3) சிக்கினார். கேப்டன் ரஜத் படிதர் (25), குர்ணால் பாண்ட்யா (18) ஓரளவு கைகொடுத்தனர். பின் எழுச்சி கண்ட டிம் டேவிட், அக்சர் படேல், முகேஷ் குமார் வீசிய கடைசி 2 ஓவரில் தலா 2 சிக்சர், ஒரு பவுண்டரி விளாசினார்.
பெங்களூரு அணி 20 ஓவரில், 7 விக்கெட்டுக்கு 163 ரன் எடுத்தது. டேவிட் (37), புவனேஷ்வர் (1) அவுட்டாகாமல் இருந்தனர்.
ராகுல் அபாரம்: எட்டக்கூடிய இலக்கை விரட்டிய டில்லி அணிக்கு டுபிளசி (2) ஏமாற்றினார். புவனேஷ்வர் 'வேகத்தில்' பிரேசர்-மெக்குர்க் (7), அபிஷேக் போரெல் (7) வெளியேறினர். அக்சர் படேல் (15) நிலைக்கவில்லை. டில்லி அணி 58 ரன்னுக்கு 4 விக்கெட்டை இழந்து தடுமாறியது. ஹேசல்வுட், குர்ணால் பாண்ட்யா, லிவிங்ஸ்டன் பந்தில் தலா ஒரு சிக்சர் விளாசிய ராகுல், 37 பந்தில் அரைசதம் எட்டினார். தொடர்ந்து அசத்திய ராகுல், ஹேசல்வுட் வீசிய 15வது ஓவரில் 3 பவுண்டரி, ஒரு சிக்சர் அடித்தார்.
சுயாஷ் வீசிய 16வ ஓவரில் ஒரு பவுண்டரி, ஒரு சிக்சர் அடித்த ஸ்டப்ஸ், புவனேஷ்வர் பந்தில் 2 பவுண்டரி விரட்டினார். யாஷ் வீசிய 18வது ஓவரில் ஒரு பவுண்டரி, 2 சிக்சர் விளாசிய ராகுல் வெற்றியை உறுதி செய்தார். டில்லி அணி 17.5 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 169 ரன் எடுத்து வெற்றி பெற்றது. ராகுல் (93 ரன், 6 சிக்சர், 7 பவுண்டரி), ஸ்டப்ஸ் (38) அவுட்டாகாமல் இருந்தனர்.