தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/கிரிக்கெட்/தேவ்தத் படிக்கல் அரைசதம்: துலீப் டிராபியில் அசத்தல்

தேவ்தத் படிக்கல் அரைசதம்: துலீப் டிராபியில் அசத்தல்

தேவ்தத் படிக்கல் அரைசதம்: துலீப் டிராபியில் அசத்தல்


ADDED : செப் 13, 2024 10:21 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 13, 2024 10:21 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அனந்தபூர்: துலீப் டிராபி லீக் போட்டியில் இந்தியா 'டி' அணியின் தேவ்தத் படிக்கல் அரைசதம் கடந்தார்.

ஆந்திராவின் அனந்தபூரில், இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) சார்பில், துலீப் டிராபி 61வது சீசன் நடக்கிறது. இதன் லீக் போட்டியில் இந்தியா 'ஏ', இந்தியா 'டி' அணிகள் விளையாடுகின்றன. இந்தியா 'ஏ' அணி முதல் இன்னிங்சில் 290 ரன்னுக்கு 'ஆல்-அவுட்' ஆனது.

பின் முதல் இன்னிங்சை துவக்கிய இந்தியா 'டி' அணிக்கு கேப்டன் ஸ்ரேயாஸ் (0), சஞ்சு சாம்சன் (5) ஏமாற்றினர். பொறுப்பாக ஆடிய தேவ்தத் படிக்கல் 92 ரன் (15 பவுண்டரி) விளாசினார். இந்தியா 'டி' அணி முதல் இன்னிங்சில் 183 ரன்னுக்கு சுருண்டது. இந்தியா 'ஏ' சார்பில் கலீல் அகமது, ஆகிப் கான் தலா 3 விக்கெட் சாய்த்தனர்.

பின் 2வது இன்னிங்சை துவக்கிய இந்தியா 'ஏ' அணிக்கு கேப்டன் மயங்க் அகர்வால் (56), பிரதாம் சிங் (59*) கைகொடுக்க, ஆட்டநேர முடிவில் 115/1 ரன் எடுத்து 222 ரன் முன்னிலையில் இருந்தது.

ருதுராஜ் அரைசதம்மற்றொரு லீக் போட்டியில் இந்தியா 'பி', இந்தியா 'சி' அணிகள் விளையாடுகின்றன. முதல் நாள் முடிவில் இந்தியா 'சி' அணி 357/5 ரன் எடுத்திருந்தது. இரண்டாம் நாள் ஆட்டத்தில் கேப்பன் ருதுராஜ் கெய்க்வாட் (58), மானவ் சுதர் (82) கைகொடுக்க, இந்தியா 'சி' அணி முதல் இன்னிங்சில் 525 ரன்னுக்கு 'ஆல்-அவுட்' ஆனது. இந்தியா 'பி' சார்பில் முகேஷ் குமார், ராகுல் சகார் தலா 4 விக்கெட் கைப்பற்றினர்.

பின் கேப்டன் அபிமன்யு ஈஸ்வரன் (51*), நாராயணன் ஜெகதீசன் (67*) கைகொடுக்க ஆட்டநேர முடிவில் இந்தியா 'பி' அணி முதல் இன்னிங்சில் 124/0 ரன் எடுத்திருந்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us