தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/கிரிக்கெட்/தேவ்தத் படிக்கல் அரைசதம்: மீண்டது இந்தியா ‘ஏ’

தேவ்தத் படிக்கல் அரைசதம்: மீண்டது இந்தியா ‘ஏ’

தேவ்தத் படிக்கல் அரைசதம்: மீண்டது இந்தியா ‘ஏ’


UPDATED : அக் 26, 2026 12:00 AM

ADDED : அக் 25, 2026 08:12 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 26, 2026 12:00 AM ADDED : அக் 25, 2026 08:12 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

லிங்கன்: முதல் டெஸ்டில் இந்தியா ‘ஏ’ அணியின் தேவ்தத் படிக்கல் அரைசதம் விளாசினார்.

நியூசிலாந்து சென்றுள்ள இந்தியா ‘ஏ’ அணி, மூன்று போட்டிகள் (4 நாள் ஆட்டம்) கொண்ட அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட், லிங்கனில் உள்ள பெர்ட் சட்கிளிப் ஓவல் மைதானத்தில் நடக்கிறது. இந்தியா ‘ஏ’ அணி முதல் இன்னிங்சில் 113 ரன் எடுத்தது. முதல் நாள் முடிவில் நியூசிலாந்து ‘ஏ’ அணி முதல் இன்னிங்சில் 135/3 ரன் எடுத்திருந்தது.

நேற்று, 2ம் நாள் ஆட்டம் நடந்தது. கர்டிஸ் ஹீபி (41) நம்பிக்கை தந்தார். டீன் பாக்ஸ்கிராப்ட் (51) அரைசதம் கடந்தார். மிட்செல் ஹே (21), கிறிஸ்டியன் கிளார்க் (42) கைகொடுத்தனர். நியூசிலாந்து ‘ஏ’ அணி முதல் இன்னிங்சில் 317 ரன்னுக்கு ‘ஆல்–அவுட்’ ஆனது. இந்தியா ‘ஏ’ அணி சார்பில் அன்ஷுல் கம்போஜ், அகிப் நபி தலா 3, ஆகாஷ் தீப் 2 விக்கெட் கைப்பற்றினர்.

பின், 2வது இன்னிங்சை துவக்கிய இந்தியா ‘ஏ’ அணிக்கு யாஷஸ்வி ஜெய்ஸ்வால் (5), கே.எல். ராகுல் (4) மீண்டும் ஏமாற்றினர். பின் தேவ்தத் படிக்கல், சாய் சுதர்சன் ஜோடி கைகொடுத்தது. தேவ்தத் படிக்கல், 65 பந்தில் அரைசதம் எட்டினார்.

ஆட்டநேர முடிவில் இந்தியா ‘ஏ’ அணி 2வது இன்னிங்சில் 106/2 ரன் எடுத்து, 98 ரன் பின்தங்கி இருந்தது. படிக்கல் (56* ரன், 9X4), சுதர்சன் (39* ரன், 5X4) அவுட்டாகாமல் இருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us