/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
படிக்கல், சஞ்சு சாம்சன் அபாரம்: துலீப் டிராபியில் அரைசதம் விளாசல்
/
படிக்கல், சஞ்சு சாம்சன் அபாரம்: துலீப் டிராபியில் அரைசதம் விளாசல்
படிக்கல், சஞ்சு சாம்சன் அபாரம்: துலீப் டிராபியில் அரைசதம் விளாசல்
படிக்கல், சஞ்சு சாம்சன் அபாரம்: துலீப் டிராபியில் அரைசதம் விளாசல்
ADDED : செப் 19, 2024 09:49 PM

அனந்தபூர்: துலீப் டிராபி லீக் போட்டியில் இந்தியா 'டி' அணியின் தேவ்தத் படிக்கல், சஞ்சு சாம்சன் அரைசதம் விளாசினர்.
ஆந்திராவின் அனந்தபூரில், துலீப் டிராபி கிரிக்கெட் 61வது சீசன் நடக்கிறது. லீக் போட்டியில் இந்தியா 'பி', இந்தியா 'டி' அணிகள் விளையாடுகின்றன. 'டாஸ்' வென்ற இந்தியா 'பி' அணி கேப்டன் அபிமன்யு ஈஸ்வரன், 'பீல்டிங்' தேர்வு செய்தார்.
இந்தியா 'டி' அணிக்கு தேவ்தத் படிக்கல் (50), ஸ்ரீகர் பாரத் (52), ரிக்கி புய் (56) நல்ல துவக்கம் கொடுத்தனர். கேப்டன் ஸ்ரேயாஸ் (0) ஏமாற்றினார். அபாரமாக ஆடிய சஞ்சு சாம்சன், தன்பங்கிற்கு அரைசதம் கடந்தார். ஆட்டநேர முடிவில் இந்தியா 'டி' அணி முதல் இன்னிங்சில் 5 விக்கெட்டுக்கு 306 ரன் எடுத்திருந்தது. சாம்சன் (89), சரண்ஷ் ஜெயின் (26) அவுட்டாகாமல் இருந்தனர். இந்தியா 'பி' சார்பில் ராகுல் சகார் 3 விக்கெட் வீழ்த்தினார்.
ஷஷ்வத் சதம்
மற்றொரு லீக் போட்டியில் இந்தியா 'ஏ', இந்தியா 'சி' அணிகள் விளையாடுகின்றன. 'டாஸ்' வென்ற இந்தியா 'சி' அணி 'பீல்டிங்' தேர்வு செய்தது. இந்தியா 'ஏ' அணிக்கு பிரதம் சிங் (6), கேப்டன் மயங்க் அகர்வால் (6), திலக் வர்மா (5), ரியான் பராக் (2), குமார் குஷாக்ரா (0) ஏமாற்றினர். ஷாம்ஸ் முலானி (44) ஓரளவு கைகொடுத்தார். தனிநபராக அசத்திய ஷஷ்வத் ரவாத் சதம் கடந்தார். தனுஷ் (10) நிலைக்கவில்லை.
ஆட்டநேர முடிவில் இந்தியா 'ஏ' அணி 224/7 ரன் எடுத்திருந்ததது. ஷஷ்வத் (122), அவேஷ் கான் (16) அவுட்டாகாமல் இருந்தனர். இந்தியா 'சி' சார்பில் அன்ஷுல் கம்போஜ் 3 விக்கெட் வீழ்த்தினார்.