/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
பயிற்சியில் தோனி: பிரிமியர் தொடருக்கு
/
பயிற்சியில் தோனி: பிரிமியர் தொடருக்கு
ADDED : ஜன 24, 2026 10:56 PM

ராஞ்சி: முன்னாள் இந்திய கேப்டன் தோனி 44. பிரிமியர் தொடரில் சென்னை அணிக்காக விளையாடுகிறார். இவரது தலைமையில் சென்னை அணி 5 முறை (2010, 2011, 2018, 2021, 2023) கோப்பை வென்றது. ஏற்கனவே சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெற்ற இவர், சென்னை அணியில் விக்கெட் கீப்பர் பேட்டராக மட்டும் உள்ளார். இதுவரை 278 போட்டியில், 5439 ரன் (சராசரி 38.30, 'ஸ்டிரைக் ரேட்' 137.45) எடுத்துள்ளார்.
பிரிமியர் தொடரின் 19வது சீசன், வரும் மார்ச் மாதம் துவங்கவுள்ளது. இந்நிலையில் ஜார்க்கண்ட் கிரிக்கெட் சங்கம் (ஜே.எஸ்.சி.ஏ.,), தனது சமூகவலைதள பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டது. இதில், ராஞ்சி மைதானத்தில் வலைப்பயிற்சிக்கு தயாரான தோனி, ஜே.எஸ்.சி.ஏ., நிர்வாகியான சவுரப் திவாரியுடன் பேசும் காட்சி இடம் பெற்றுள்ளது. தவிர, 'யார் மீண்டும் வந்திருக்கிறார் என்று பாருங்கள். ஜே.எஸ்.சி.ஏ.,வின் பெருமை: மகேந்திர சிங் தோனி' என, பதிவிட்டிருந்தது.
இந்த வீடியோ 'வைரலாக' பரவியது. பிரிமியர் தொடருக்கான பயிற்சியை தோனி துவக்கிவிட்டார் என ரசிகர்கள் உற்சாகமடைந்தனர்.

