தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/கிரிக்கெட்/பைனலுக்கு முன்னேறியது திண்டுக்கல்: கோவை அணியுடன் மோதல்

பைனலுக்கு முன்னேறியது திண்டுக்கல்: கோவை அணியுடன் மோதல்

பைனலுக்கு முன்னேறியது திண்டுக்கல்: கோவை அணியுடன் மோதல்


ADDED : ஆக 03, 2024 12:13 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 03, 2024 12:13 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை: டி.என்.பி.எல்., பைனலுக்கு திண்டுக்கல் அணி முன்னேறியது. கேப்டன் அஷ்வின் அரைசதம் கடந்து கைகொடுக்க திண்டுக்கல் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. திருப்பூர் அணி வெளியேறியது.

தமிழகத்தில், டி.என்.பி.எல்., 8வது சீசன் நடக்கிறது. 'நடப்பு சாம்பியன்' கோவை, முதல் அணியாக பைனலுக்கு முன்னேறியது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த தகுதிச் சுற்று-2ல் திண்டுக்கல், திருப்பூர் அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற திண்டுக்கல் அணி கேப்டன் அஷ்வின் 'பீல்டிங்' தேர்வு செய்தார்.

திண்டுக்கல் அணி பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திருப்பூர் அணியினர் துவக்கத்தில் இருந்தே தடுமாறினர். திரன் வீசிய 2வது ஓவரில் 2 பவுண்டரி அடித்தார் அமித் சாத்விக். சந்தீப் வாரியர் பந்தை சிக்சருக்கு அனுப்பிய துஷார் ரஹேஜா (8), அஷ்வின் 'சுழலில்' சிக்கினார். சந்தீப் வாரியர் பந்தில் அமித் சாத்விக் (16) அவுட்டானார். அடுத்து வந்த பாலசந்தர் அனிருத் (6), ராதாகிருஷ்ணன் (2) நிலைக்கவில்லை. வருண் சக்கரவர்த்தி 'சுழலில்' சிக்கிய கேப்டன் சாய் கிஷோர் 2 ரன்னில் அவுட்டானார். திருப்பூர் அணி 38 ரன்னுக்கு 5 விக்கெட்டை இழந்து திணறியது.

பின் இணைந்த கணேஷ், மான் பாப்னா ஜோடி ஆறுதல் தந்தது. வருண் பந்தை சிக்சருக்கு அனுப்பிய மான் பாப்னா, சுபோத் வீசிய 13வது ஓவரில் வரிசையாக ஒரு சிக்சர், 2 பவுண்டரி விளாசினார். ஆறாவது விக்கெட்டுக்கு 42 ரன் சேர்த்த போது விக்னேஷ் பந்தில் பாப்னா (26) அவுட்டானார். தொடர்ந்து அசத்திய விக்னேஷ் 'சுழலில்' கணேஷ் (17) 'பெவிலியன்' திரும்பினார். வருண் பந்தில் முகமது அலி (2) அவுட்டானார். அஷ்வின் பந்தை ராமலிங்கம் ரோகித் பவுண்டரிக்கு அனுப்ப, திருப்பூர் அணி 18வது ஓவரில் 100 ரன்னை எட்டியது. அஜித் ராம் 8 ரன்னில் ஆட்டமிழந்தார். ராமலிங்கம் ரோகித் (14) 'ரன்-அவுட்' ஆனார்.

திருப்பூர் அணி 19.4 ஓவரில் 108 ரன்னுக்கு 'ஆல்-அவுட்' ஆனது. புவனேஸ்வரன் (1) அவுட்டாகாமல் இருந்தார். திண்டுக்கல் சார்பில் விக்னேஷ் 3, சுபோத், வருண் தலா 2 விக்கெட் சாய்த்தனர். அஷ்வின், சந்தீப் வாரியர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

அஷ்வின் அசத்தல்:சுலப இலக்கை விரட்டிய திண்டுக்கல் அணிக்கு விமல் குமார், கேப்டன் அஷ்வின் ஜோடி சூப்பர் துவக்கம் கொடுத்தது. அஜித் ராம் வீசிய 4வது ஓவரில் 3 பவுண்டரி விரட்டிய அஷ்வின், சாய் கிஷோர் பந்தில் வரிசையாக ஒரு சிக்சர், 2 பவுண்டரி விளாசினார். முதல் விக்கெட்டுக்கு 81 ரன் சேர்த்த போது விமல் (28) அவுட்டானார். அபாரமாக ஆடிய அஷ்வின், 25 பந்தில் அரைசதம் கடந்தார். புவனேஸ்வரன் வீசிய 11வது ஓவரில் 2 சிக்சர் பறக்கவிட்ட அஷ்வின் வெற்றியை உறுதி செய்தார்.

திண்டுக்கல் அணி 10.5 ஓவரில் ஒரு விக்கெட்டுக்கு 112 ரன் எடுத்து வெற்றி பெற்றது. அஷ்வின் (69 ரன், 30 பந்து, 3 சிக்சர், 11 பவுண்டரி), பாபா இந்திரஜித் (8) அவுட்டாகாமல் இருந்தனர்.

நாளை சென்னையில் நடக்கவுள்ள பைனலில் திண்டுக்கல், கோவை அணிகள் மோதுகின்றன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us