/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
திண்டுக்கல் முதல் சாம்பியன்: கோவை அணிக்கு 2வது இடம்
/
திண்டுக்கல் முதல் சாம்பியன்: கோவை அணிக்கு 2வது இடம்
திண்டுக்கல் முதல் சாம்பியன்: கோவை அணிக்கு 2வது இடம்
திண்டுக்கல் முதல் சாம்பியன்: கோவை அணிக்கு 2வது இடம்
ADDED : ஆக 05, 2024 12:42 AM

சென்னை: டி.என்.பி.எல்., தொடரில் திண்டுக்கல் அணி முதன்முறையாக கோப்பை வென்றது. பைனலில் கேப்டன் அஷ்வின் அரைசதம் விளாச 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கோவை அணி 2வது இடம் பிடித்தது.
தமிழகத்தில் டி.என்.பி.எல்., 8வது சீசன் நடந்தது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த பைனலில் கோவை, திண்டுக்கல் அணிகள் மோதின. மழையால் போட்டியில் 40 நிமிடம் தாமதமாக துவங்கியது. 'டாஸ்' வென்ற திண்டுக்கல் அணி கேப்டன் அஷ்வின் 'பீல்டிங்' தேர்வு செய்தார்.
கோவை அணிக்கு சுஜய் (22), சுரேஷ் குமார் (11) ஜோடி சுமாரான துவக்கம் கொடுத்தது. சாய் சுதர்சன் (14) நிலைக்கவில்லை. பின் இணைந்த ராம் அரவிந்த் (27), அதீக் உர் ரஹ்மான் (25) ஜோடி ஆறுதல் தந்தது. கேப்டன் ஷாருக்கான் (3) சோபிக்கவில்லை. கோவை அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 129 ரன் எடுத்தது. முகமது (15), மணிமாறன் சித்தார்த் (7) அவுட்டாகாமல் இருந்தனர். திண்டுக்கல் அணி சார்பில் சந்தீப் வாரியர், வருண் சக்கரவர்த்தி, விக்னேஷ் தலா 2 விக்கெட் சாய்த்தனர்.
சுலப இலக்கை விரட்டிய திண்டுக்கல் அணிக்கு ஷிவம் சிங் (4), விமல் குமார் (9) ஏமாற்றினர். பின் இணைந்த கேப்டன் அஷ்வின், பாபா இந்திரஜித் ஜோடி நம்பிக்கை தந்தது. மூன்றாவது விக்கெட்டுக்கு 65 ரன் சேர்த்த போது இந்திரஜித் (32) அவுட்டானார். அபாரமாக ஆடிய அஷ்வின் (52 ரன், 3 சிக்சர்) அரைசதம் விளாசினார். ஷாருக்கான் பந்தை சிக்சருக்கு அனுப்பிய சரத் குமார் வெற்றியை உறுதி செய்தார்.
திண்டுக்கல் அணி 18.2 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 131 ரன் எடுத்து வெற்றி பெற்றது. சரத் குமார் (27), பூபதி குமார் (3) அவுட்டாகாமல் இருந்தனர். ஆட்ட நாயகன் விருதை அஷ்வின் வென்றார். தொடர் நாயகன் விருதை கோவை அணி கேப்டன் ஷாருக்கான் (225 ரன், 13 விக்கெட்) கைப்பற்றினார்.