ADDED : ஜூன் 26, 2026 11:17 PM

நாட்டிங்காம்: இங்கிலாந்து பவுலர்கள் எழுச்சி பெற, நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 438 ரன் எடுத்தது.
இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகள் மோதும் 3வது டெஸ்ட் நாட்டிங்காமில் நடக்கிறது. முதல் நாள் முடிவில் நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 361/4 ரன் எடுத்திருந்தது.
இரண்டாம் நாள் ஆட்டத்தில் நியூசிலாந்து அணிக்கு, ஸ்டோக்ஸ் தொல்லை தந்தார். இவரது 'வேகத்தில்' டேரில் மிட்செல் (11), வில் ஓ'ரூர்கே (19), சான்ட்னர் (4) வெளியேறினர். டாம் பிளன்டெல் (30) ஆறுதல் தந்தார். நாதன் ஸ்மித் (6), பென் சியர்ஸ் (0) ஏமாற்றினர். நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 438 ரன்னுக்கு 'ஆல்-அவுட்' ஆனது. இங்கிலாந்து சார்பில் ஸ்டோக்ஸ் 4, ஆர்ச்சர், பஷிர் தலா 2 விக்கெட் கைப்பற்றினர்.
பின், முதல் இன்னிங்சை துவக்கிய இங்கிலாந்து அணிக்கு எமிலியோ (0) ஏமாற்றினார். பென் டக்கெட் சதம் (113) கடந்தார். ஜேக்கப் பெத்தேல் அரைசதம் கடந்தார். ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 223/2 ரன் எடுத்திருந்தது. பெத்தேல் (74), ஜோ ரூட் (21) அவுட்டாகாமல் இருந்தனர்.
