/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
துலீப் டிராபி: இஷான் கிஷான் விலகல்
/
துலீப் டிராபி: இஷான் கிஷான் விலகல்
ADDED : ஆக 18, 2025 09:32 PM

கோல்கட்டா: துலீப் டிராபியில் இருந்து காயம் காரணமாக இந்தியாவின் இஷான் கிஷான், ஆகாஷ் தீப் விலகினர்.
இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) சார்பில், துலீப் டிராபி 62வது சீசன் (ஆக. 28 - செப். 15) நடக்கவுள்ளது. மொத்தம் 6 அணிகள் பங்கேற்கின்றன. பெங்களூருவில் வரும் ஆக. 28ல் துவங்கும் காலிறுதியில் வடக்கு, கிழக்கு மண்டல அணிகள் விளையாடுகின்றன. இப்போட்டிக்கான கிழக்கு மண்டல அணிக்கு வேகப்பந்துவீச்சாளர் ஆகாஷ் தீப், விக்கெட் கீப்பர் பேட்டர் இஷான் கிஷான் தேர்வாகினர். இதில் இஷான் கிஷான் கேப்டனாக அறிவிக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில் காயம் காரணமாக ஆகாஷ் தீப் (முதுகு பகுதி), இஷான் கிஷான் (கை) இப்போட்டியில் இருந்து விலகினர். சமீபத்தில் முடிந்த இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 13 விக்கெட் சாய்த்த ஆகாஷிற்கு பதிலாக பீகாரின் முக்தார் ஹுசைன் தேர்வு செய்யப்பட்டார். இஷான் கிஷானுக்கு பதிலாக ஒடிசா விக்கெட் கீப்பர் ஆசிர்வாத் ஸ்வைன் இடம் பிடித்தார். இருப்பினும் 'லெவன்' அணியில் விக்கெட் கீப்பர் இடத்துக்கு ஜார்க்கண்ட் வீரர் குமார் குஷாக்ரா இடம் பெற அதிக வாய்ப்பு உள்ளது. பெங்கால் 'டாப்-ஆர்டர்' பேட்டர் அபிமன்யு ஈஸ்வரன் புதிய கேப்டனாக அறிவிக்கப்பட்டார். ஏற்கனவே துணை கேப்டனாக ரியான் பராக் உள்ளார்.