/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
சும்மா இருப்பது எவ்வளவு கஷ்டம்: புலம்பும் ஷர்துல் தாகூர்
/
சும்மா இருப்பது எவ்வளவு கஷ்டம்: புலம்பும் ஷர்துல் தாகூர்
சும்மா இருப்பது எவ்வளவு கஷ்டம்: புலம்பும் ஷர்துல் தாகூர்
சும்மா இருப்பது எவ்வளவு கஷ்டம்: புலம்பும் ஷர்துல் தாகூர்
ADDED : ஆக 18, 2025 10:45 PM

மும்பை: ''விளையாடும் 'லெவனில்' வாய்ப்பு கிடைக்காமல் 'பெஞ்சில்' அமர்ந்திருப்பது கடினமான காரியம்,'' என ஷர்துல் தாகூர் தெரிவித்தார்.
சமீபத்தில் இந்தியா-இங்கிலாந்து மோதிய டெஸ்ட் தொடர் 2-2 என சமன் ஆனது. இத்தொடரில் இந்திய அணியின் பேட்டர் அபிமன்யு ஈஸ்வரன் 29, 'ஸ்பின்னர்' குல்தீப் யாதவ், 'வேகப்புயல்' அர்ஷ்தீப் சிங்கிற்கு 5 போட்டிகளிலும் வாய்ப்பு கிடைக்கவில்லை. 'ஆல்-ரவுண்டர்' ஷர்துல் தாகூர் இரு போட்டியில் மட்டும் இடம் பெற்றார். லீட்சில் நடந்த முதல் டெஸ்டில் (1, 4 ரன், 2 விக்..) சோபிக்கவில்லை. மான்செஸ்டர் போட்டியில் 41 ரன் எடுத்த இவர், 11 ஓவர் வீசினார்.
ஈஸ்வரா...ஈஸ்வரா: வாஷிங்டன் சுந்தர் பேட்டிங்கில் அசத்தியதால், குல்தீப் நிராகரிக்கப்பட்டார். அர்ஷ்தீப் காயத்தால் அவதிப்பட்டதால், வாய்ப்பு நழுவியது. பெங்கால் துவக்க பேட்டர் அபிமன்யு ஈஸ்வரன் நிலை தான் ரொம்ப பரிதாபம். 103 முதல் தர போட்டிகளில் 27 சதம் உட்பட 7841 ரன் எடுத்துள்ளார். கடந்த 2022ல் இந்திய டெஸ்ட் அணிக்காக (எதிர், வங்கம்) முதலில் தேர்வு செய்யப்பட்டார். அடுத்து, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து தொடரில் புறக்கணிக்கப்பட்டார். இவருடன் தேர்வு செய்யப்பட்டவர்களில் ஜெய்ஸ்வால், இஷான் கிஷான், ஆகாஷ் தீப், ஹர்ஷித் ராணா, சாய் சுதர்சன், கம்போஜ் உட்பட 15 பேர் விளையாடும் 'லெவனில்' வாய்ப்பு பெற்றனர். ஆனால் ஈஸ்வரன் மட்டும் 'ஐயம் வெயிட்டிங்' என 961 நாள் காத்திருந்தார். 'பெஞ்சில்' அமர வைக்கப்பட்ட இவர், அவ்வப்போது 'டிரிங்ஸ்' மட்டும் எடுத்து வந்தார். வரும் டெஸ்ட் தொடரில் வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கிறார்.
கொஞ்சம் அதிர்ஷ்டம்: இது பற்றி ஷர்துல் தாகூர் கூறுகையில்,''விளையாடும் 'லெவனில்' வாய்ப்பு கிடைக்காமல் களத்திற்கு வெளியே 'பெஞ்சில்' சும்மா அமர்ந்திருப்பது கடினமான காரியம். இந்த அனுபவம் எனக்கும் சில நேரங்களில் ஏற்பட்டுள்ளது. அப்போது உணர்ச்சிவசப்பட்ட நிலையில் இருப்போம். ஒரு கட்டத்தில் மிகவும் 'போர்' அடிக்கும். போட்டிகளில் பங்கேற்காமல், நாம் இங்கே என்ன செய்து கொண்டிருக்கிறோம்? என நொந்து கொள்ள நேரிடும்.
இந்திய 'லெவனில்' இடம் பிடிக்க கடும் போட்டி காணப்படுகிறது. அணி நிர்வாகம் சிறந்த 11 வீரர்களை தேர்வு செய்துள்ளது. நமக்கு இந்த போட்டியில் விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை என திரும்ப திரும்ப சொல்லி ஆறுதல் தேடிக் கொள்ள வேண்டும். நான், குல்தீப், ஈஸ்வரன், அர்ஷ்தீப் போன்றோர் இதே மன நிலையில் தான் இருந்தோம். இருப்பினும் இந்திய அணியில் வாய்ப்பு கிடைத்தது எனது அதிர்ஷ்டம். இதனால் தான் சக வீரர்களுடன் 'டிரஸ்சிங் ரூம்', உணவை பகிர்ந்து கொள்ள முடிந்தது,''என்றார்.