sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், பிப்ரவரி 24, 2026 ,மாசி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

விளையாட்டு

/

கிரிக்கெட்

/

ஈஸ்டர்ன் கேப் 'சாம்பியன்': 'எஸ்.ஏ.20' கிரிக்கெட்டில்

/

ஈஸ்டர்ன் கேப் 'சாம்பியன்': 'எஸ்.ஏ.20' கிரிக்கெட்டில்

ஈஸ்டர்ன் கேப் 'சாம்பியன்': 'எஸ்.ஏ.20' கிரிக்கெட்டில்

ஈஸ்டர்ன் கேப் 'சாம்பியன்': 'எஸ்.ஏ.20' கிரிக்கெட்டில்


ADDED : ஜன 25, 2026 11:46 PM

Google News

ADDED : ஜன 25, 2026 11:46 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கேப்டவுன்: 'எஸ்.ஏ.20' கிரிக்கெட் தொடரில் ஈஸ்டர்ன் கேப் அணி சாம்பியன் பட்டம் வென்றது. பைனலில் 6 விக்கெட் வித்தியாசத்தில் பிரிட்டோரியா அணியை வீழ்த்தியது.

தென் ஆப்ரிக்காவில், 'எஸ்.ஏ.20' கிரிக்கெட் ('டி-20') 4வது சீசன் நடந்தது. கேப்டவுனில் நடந்த பைனலில் பிரிட்டோரியா கேபிடல்ஸ், ஈஸ்டர்ன் கேப் அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற ஈஸ்டர்ன் கேப் அணி 'பீல்டிங்' தேர்வு செய்தது.

பிரிட்டோரியா அணிக்கு டிவால்டு பிரவிஸ் (101) சதம் கடந்து கைகொடுக்க, 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 158 ரன் எடுத்தது. ஈஸ்டர்ன் கேப் அணி சார்பில் மார்கோ யான்சென் 3 விக்கெட் கைப்பற்றினார்.

எட்டக்கூடிய இலக்கை விரட்டிய ஈஸ்டர்ன் கேப் அணிக்கு மேத்யூ பிரீட்ஸ்கே, கேப்டன் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் அரைசதம் கடந்து கைகொடுத்தனர். கடைசி ஓவரில் வெற்றிக்கு 9 ரன் தேவைப்பட்டன. பிரைஸ் பார்சன்ஸ் வீசிய 20வது ஓவரின் முதலிரண்டு பந்தை சிக்சருக்கு விளாசிய ஸ்டப்ஸ் வெற்றியை உறுதி செய்தார்.

ஈஸ்டர்ன் கேப் அணி 19.2 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 162 ரன் எடுத்து வெற்றி பெற்றது. பிரீட்ஸ்கே (68), ஸ்டப்ஸ் (63) அவுட்டாகாமல் இருந்தனர். ஈஸ்டர்ன் கேப் அணி 3வது முறையாக (2023, 2024, 2026) கோப்பை வென்றது.






      Dinamalar
      Follow us