தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/கிரிக்கெட்/இந்தியாவிடம் வீழ்ந்தது இங்கிலாந்து * அஷ்வின், பும்ரா அபாரம்

இந்தியாவிடம் வீழ்ந்தது இங்கிலாந்து * அஷ்வின், பும்ரா அபாரம்

இந்தியாவிடம் வீழ்ந்தது இங்கிலாந்து * அஷ்வின், பும்ரா அபாரம்


UPDATED : பிப் 05, 2024 08:07 PM

ADDED : பிப் 05, 2024 03:41 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : பிப் 05, 2024 08:07 PM ADDED : பிப் 05, 2024 03:41 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

விசாகப்பட்டனம்: இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் இந்திய அணி 106 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.. பும்ரா ஆட்ட நாயகன் ஆனார்.

இந்தியா வந்துள்ள இங்கிலாந்து அணி ஐந்து போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்டில் இங்கிலாந்து வென்றது. இரண்டாவது டெஸ்ட் விசாகப்பட்டனத்தில் நடந்தது. முதல் இன்னிங்சில் இந்தியா 399/10, இங்கிலாந்து 253/10 ரன் எடுத்தது. இரண்டாவது இன்னிங்சில் இந்தியா 255/10 ரன் எடுத்தது.

399 ரன் எடுத்தால் வெற்றி என களமிறங்கிய இங்கிலாந்து அணி, மூன்றாவது நாள் முடிவில் இரண்டாவது இன்னிங்சில் 67/1 ரன் எடுத்து, 331 ரன் பின்தங்கி இருந்தது. கிராலே (29), 'நைட் வாட்ச்மேன்' ரேஹன் அகமது (9) அவுட்டாகாமல் இருந்தனர்.

இன்று நான்காவது நாள் ஆட்டம் நடந்தது. அக்சர் படேல் பந்தில் ரேஹன் அகமது (23) அவுட்டானார். சுழலில் அசத்திய அஷ்வின், போப் (23), ஜோ ரூட் (16) என இருவரையும் அவுட்டாக்கினார். கிராலே அரைசதம் விளாசினார். இவர் 73 ரன் எடுத்த போது, குல்தீப் 'வலையில்' சிக்கினார்.

பேர்ஸ்டோவை (26) பும்ரா திருப்பி அனுப்பினார். அடுத்து வந்த கேப்டன் ஸ்டோக்ஸ் (11) ஸ்ரேயாஸ் 'த்ரோ'வில் ரன் அவுட்டாக, இந்தியா பக்கம் வெற்றி திரும்பியது. 8 வது விக்கெட்டுக்கு இணைந்து இந்தியாவுக்கு தொல்லை கொடுத்த போக்சை (36), பும்ரா தனது பந்தில் 'கேட்ச்' செய்து வெளியேற்றினார்.

சோயப் பஷிர் (0) முகேஷ் பந்தில் வீழ்ந்தார். கடைசியில் ஹார்ட்லேவை (36) பும்ரா போல்டாக்க, இங்கிலாந்து அணி 292 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. இந்திய அணி 106 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தியா சார்பில் பும்ரா 3, அஷ்வின் 3 விக்கெட் வீழ்த்தினர். ஆட்டநாயகனாக பும்ரா (6+3 விக்.,) தேர்வு செய்யப்பட்டார்.

டெஸ்ட் தொடர் தற்போது 1-1 என சமன் ஆனது. இரு அணிகள் மோதும் மூன்றாவது டெஸ்ட் வரும் பிப்., 15-19ல் ராஜ்கோட்டில் நடக்கவுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us