தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/கிரிக்கெட்/இங்கிலாந்து அணி முன்னிலை: வெஸ்ட் இண்டீஸ் தடுமாற்றம்

இங்கிலாந்து அணி முன்னிலை: வெஸ்ட் இண்டீஸ் தடுமாற்றம்

இங்கிலாந்து அணி முன்னிலை: வெஸ்ட் இண்டீஸ் தடுமாற்றம்


ADDED : ஜூலை 27, 2024 11:56 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 27, 2024 11:56 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பர்மிங்காம்: முதல் இன்னிங்சில் 376 ரன் குவித்த இங்கிலாந்து அணி 94 ரன் முன்னிலை பெற்றது.

இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் 3வது டெஸ்ட் பர்மிங்காமில் நடக்கிறது. வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்சில் 282 ரன் எடுத்தது. முதல் நாள் முடிவில் இங்கிலாந்து அணி 38/3 ரன் எடுத்திருந்தது.

இரண்டாம் நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து அணிக்கு போப் (10), ஹாரி புரூக் (2) சோபிக்கவில்லை. அபாரமாக ஆடிய ஜோ ரூட் (87), கேப்டன் பென் ஸ்டோக்ஸ் (54), ஜேமி ஸ்மித் (95), கிறிஸ் வோக்ஸ் (62) அரைசதம் விளாசினார். இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 376 ரன்னுக்கு 'ஆல்-அவுட்' ஆனது. வெஸ்ட் இண்டீஸ் சார்பில் அல்சாரி ஜோசப் 4 விக்கெட் வீழ்த்தினார்.

பின் 2வது இன்னிங்சை துவக்கிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு கேப்டன் கிரெய்க் பிராத்வைட் (0) ஏமாற்றினார். கிர்க் மெக்கென்சி (8) சோபிக்கவில்லை. ஆட்டநேர முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 2வது இன்னிங்சில் 2 விக்கெட்டுக்கு 33 ரன் எடுத்து, 61 ரன் பின்தங்கி இருந்தது. மைக்கேல் லுாயிஸ் (18), அலிக் அதானஸ் (5) அவுட்டாகாமல் இருந்தனர். இங்கிலாந்து சார்பில் அட்கின்சன், வோக்ஸ் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us