தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/கிரிக்கெட்/இங்கிலாந்து அணி தடுமாற்றம்: முன்னிலை பெற்றது பாக்.,

இங்கிலாந்து அணி தடுமாற்றம்: முன்னிலை பெற்றது பாக்.,

இங்கிலாந்து அணி தடுமாற்றம்: முன்னிலை பெற்றது பாக்.,


UPDATED : செப் 11, 2026 11:32 PM

ADDED : செப் 11, 2026 11:00 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 11, 2026 11:32 PM ADDED : செப் 11, 2026 11:00 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பர்மிங்காம்: மூன்றாவது டெஸ்டில் இங்கிலாந்து பவுலர்கள் தடுமாற, பாகிஸ்தான் அணி 2வது இன்னிங்சில் 449 ரன் குவித்து, 129 ரன் முன்னிலை பெற்றது.

இங்கிலாந்து, பாகிஸ்தான் அணிகள் மோதும் 3வது டெஸ்ட், பர்மிங்காமில் நடக்கிறது. முதல் இன்னிங்சில் பாகிஸ்தான் 133, இங்கிலாந்து 453 ரன் எடுத்தன. இரண்டாம் நாள் முடிவில், பாகிஸ்தான் அணி 2வது இன்னிங்சில் 52/2 ரன் எடுத்திருந்தது. அவைஸ் (29), மசோத் (21) அவுட்டாகாம் இருந்தனர்.

மூன்றாம் நாள் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணிக்கு அசான் அவைஸ், ஷான் மசோத் ஜோடி நம்பிக்கை தந்தது. இருவரும் அரைசதம் விளாசினர். இவர்களை பிரிக்க முடியாமல் இங்கிலாந்து பவுலர்கள் தடுமாறினர். மூன்றாவது விக்கெட்டுக்கு 125 ரன் சேர்த்த போது லாரன்ஸ் பந்தில் அவைஸ் (59) அவுட்டானார். அட்கின்சன் 'வேகத்தில்' மசோத் (95) சதமடிக்கும் வாய்ப்பை இழந்தார்.

அடுத்து வந்த கேப்டன் பாபர் ஆசம் (76), தன்பங்கிற்கு அரைசதம் கடந்தார். சவுத் ஷகீல் (29), காசி கோரி (16), முகமது இம்ரான் (4) நிலைக்கவில்லை. ராசாவுல்லா (81) அரைசதம் கடந்தார். முகமது அபாஸ் (42) ஓரளவு கைகொடுத்தார்.

பாகிஸ்தான் அணி 2வது இன்னிங்சில் 449 ரன்னுக்கு 'ஆல்-அவுட்' ஆனது. முகமது அலி (4) அவுட்டாகாமல் இருந்தார். இங்கிலாந்து சார்பில் அட்கின்சன் 2 விக்கெட் வீழ்த்தினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us