/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
இங்கிலாந்து அணி இமாலய வெற்றி: 342 ரன் வித்தியாசத்தில்...
/
இங்கிலாந்து அணி இமாலய வெற்றி: 342 ரன் வித்தியாசத்தில்...
இங்கிலாந்து அணி இமாலய வெற்றி: 342 ரன் வித்தியாசத்தில்...
இங்கிலாந்து அணி இமாலய வெற்றி: 342 ரன் வித்தியாசத்தில்...
ADDED : செப் 07, 2025 11:29 PM

சவுத்தாம்ப்டன்: இங்கிலாந்து அணி 342 ரன் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்று சாதனை படைத்தது.
இங்கிலாந்து சென்ற தென் ஆப்ரிக்க அணி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்றது. முதலிரண்டு போட்டியில் வென்ற தென் ஆப்ரிக்கா, 2-0 என ஏற்கனவே தொடரை கைப்பற்றியது. சவுத்தாம்ப்டனில் 3வது போட்டி நடந்தது. 'டாஸ்' வென்ற தென் ஆப்ரிக்க அணி 'பீல்டிங்' தேர்வு செய்தது.
இங்கிலாந்து அணி 50 ஓவரில் 414/5 ரன் குவித்தது. ஜேக்கப் பெத்தேல் (110), ஜோ ரூட் (100) சதம் விளாசினர். கடின இலக்கை விரட்டிய தென் ஆப்ரிக்கா 20.5 ஓவரில் 72 ரன்னுக்கு சுருண்டு தோல்வியடைந்தது. தென் ஆப்ரிக்காவின் கார்பின் போஷ் 20 ரன் எடுத்தார். இங்கிலாந்து சார்பில் ஆர்ச்சர் 4, அடில் ரஷித் 3 விக்கெட் சாய்த்தனர். தென் ஆப்ரிக்க அணி 2-1 என தொடரை கைப்பற்றி கோப்பை வென்றது.
ஒருநாள் போட்டி அரங்கில் அதிக ரன் வித்தியாசத்தில் (342) வெற்றி பெற்ற அணிகளுக்கான பட்டியலில் முதலிடம் பிடித்து சாதனை படைத்தது இங்கிலாந்து. இதற்கு முன், இந்திய அணி 317 ரன் வித்தியாசத்தில் (எதிர்: இலங்கை, 2023, இடம்: திருவனந்தபுரம்) வெற்றி பெற்றிருந்தது.