/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
தொடரை வென்றது இங்கிலாந்து: இலங்கை மீண்டும் தோல்வி
/
தொடரை வென்றது இங்கிலாந்து: இலங்கை மீண்டும் தோல்வி
ADDED : செப் 01, 2024 11:54 PM

லார்ட்ஸ்: லார்ட்ஸ் டெஸ்டில் இங்கிலாந்து அணி 190 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இங்கிலாந்து, இலங்கை அணிகள் மோதிய 2வது டெஸ்ட் லண்டன், லார்ட்ஸ் மைதானத்தில் நடந்தது. முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 427, இலங்கை 196 ரன் எடுத்தன. இங்கிலாந்து அணி 2வது இன்னிங்சில் 251 ரன் எடுத்தது. பின், 483 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி, 3ம் நாள் முடிவில் 2வது இன்னிங்சில் 53/2 ரன் எடுத்திருந்தது.
நான்காம் நாள் ஆட்டத்தில் திமுத் கருணாரத்னே (55), தினேஷ் சண்டிமால் (58), கேப்டன் தனஞ்செயா டி சில்வா (50) அரைசதம் விளாசினர். மாத்யூஸ் (36), மிலன் ரத்னாயகே (43) ஓரளவு கைகொடுத்தனர். மற்றவர்கள் ஏமாற்ற இலங்கை அணி 2வது இன்னிங்சில் 292 ரன்னுக்கு 'ஆல்-அவுட்'டாகி தோல்வியடைந்தது. இங்கிலாந்து சார்பில் 5 விக்கெட் சாய்த்த அட்கின்சன், ஆட்ட நாயகன் விருது வென்றார்.
மூன்று போட்டிகள் கொண்ட தொடரை இங்கிலாந்து அணி 2-0 என கைப்பற்றி முன்னிலை பெற்றது.