/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
45 ரன்னுக்கு சுருண்ட அயர்லாந்து * இங்கிலாந்து இமாலய வெற்றி
/
45 ரன்னுக்கு சுருண்ட அயர்லாந்து * இங்கிலாந்து இமாலய வெற்றி
45 ரன்னுக்கு சுருண்ட அயர்லாந்து * இங்கிலாந்து இமாலய வெற்றி
45 ரன்னுக்கு சுருண்ட அயர்லாந்து * இங்கிலாந்து இமாலய வெற்றி
ADDED : செப் 10, 2024 11:04 PM

பெல்பாஸ்ட்: இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் அயர்லாந்து பெண்கள் அணி 45 ரன்னுக்கு சுருண்டு தோற்றது.
அயர்லாந்து சென்ற இங்கிலாந்து பெண்கள் அணி 3 போட்டி கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. இரண்டாவது போட்டி பெல்பாஸ்டில் நடந்தது.
முதலில் களமிறங்கிய இங்கிலாந்த அணிக்கு டாமி பியுமாண்ட் சதம் விளாசி கைகொடுத்தார். பிரேயா 65 ரன் எடுத்து உதவ, இங்கிலாந்து அணி 50 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 320 ரன் குவித்தது. டாமி (150) அவுட்டாகாமல் இருந்தார்.
பின் களமிறங்கிய அயர்லாந்து அணிக்கு கேப்டன் கேபி லீவிஸ் (0) உட்பட யாரும் ஒற்றை இலக்க ரன்னை தாண்டவில்லை. துவக்க வீராங்கனை உனா ரேமண்ட் மட்டும் 22 ரன் எடுத்து ஆறுதல் தந்தார். அயர்லாந்து அணி 16.5 ஓவரில் 45 ரன்னுக்கு சுருண்டு தோற்றது. இது ஒருநாள் அரங்கில் அயர்லாந்து பெண்கள் அணியின் மிக குறைந்த ஸ்கோராக அமைந்தது.
இங்கிலாந்து பெண்கள் அணி ஒருநாள் அரங்கில், ரன் அடிப்படையில் தனது மிகப்பெரிய (275 ரன் வித்தியாசம்) வெற்றியை பதிவு செய்தது. இங்கிலாந்து அணி 2-0 என தொடரை கைப்பற்றியது.