sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 28, 2025 ,ஐப்பசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

விளையாட்டு

/

கிரிக்கெட்

/

சென்னை அணி கொள்கையில் மாற்றம்: கேப்டன் தோனி சூசகம்

/

சென்னை அணி கொள்கையில் மாற்றம்: கேப்டன் தோனி சூசகம்

சென்னை அணி கொள்கையில் மாற்றம்: கேப்டன் தோனி சூசகம்

சென்னை அணி கொள்கையில் மாற்றம்: கேப்டன் தோனி சூசகம்

6


UPDATED : ஏப் 21, 2025 11:11 PM

ADDED : ஏப் 21, 2025 10:05 PM

Google News

UPDATED : ஏப் 21, 2025 11:11 PM ADDED : ஏப் 21, 2025 10:05 PM

6


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மும்பை: ''வரும் போட்டிகளில் கட்டாயம் வெல்ல வேண்டும். ஒருவேளை தோற்றால், அடுத்த ஆண்டுக்கான சிறந்த கூட்டணியை கண்டறிவோம்,'' என கேப்டன் தோனி தெரிவித்தார்.

வான்கடே மைதானத்தில் நேற்று முன் தினம் நடந்த பிரிமியர் லீக் போட்டியில் சென்னை அணி, மும்பையிடம் வீழ்ந்தது. சென்னை சார்பில் அறிமுக வீரர் ஆயுஷ் மாத்ரே (15 பந்தில் 32 ரன்) மட்டும் நம்பிக்கை தந்தார். நவீன 'டி-20'க்கு ஏற்ப ஷிவம் துபே, ஜடேஜா அதிரடியாக ஆடவில்லை. பும்ரா பந்தில் கேப்டன் தோனி (4) அவுட்டாகி ஏமாற்றினார். ஆறாவது தோல்வியை சந்தித்ததால், சென்னை ரசிகர்கள் வெறுத்து போயினர்.

2023 போல முடியுமா

புள்ளிப்பட்டியலில் சென்னை அணி, கடைசி இடத்தில் உள்ளது. 'பிளே-ஆப்' சுற்றுக்கு முன்னேற, எஞ்சிய 6 போட்டிகளில் வெல்ல வேண்டும். 'ரன் ரேட்' அதலபாதாளத்தில் இருப்பதால், தேறுவது கடினம். இந்த உண்மையை உணர்ந்த கேப்டன் தோனி, பயிற்சியாளர் பிளமிங், அடுத்த ஆண்டுக்கான அணியை தயார் செய்வதில் ஆர்வமாக உள்ளனர். 2022ல் சென்னை அணி 9வது இடம் பிடித்தது. இதிலிருந்து மீண்டு, 2023ல் சாம்பியன் பட்டம் வென்றது. இதே போல 2026ல் சாதிக்க திட்டமிடுகின்றனர்.

கொள்கை மாற்றம்சென்னை அணியில் அனுபவ வீரர்களுக்கு தான் முன்னுரிமை கொடுக்கப்படும். ஹைடன், வாட்சன், ராயுடு போன்றவர்கள் இருந்ததால், 'டாடிஸ் ஆர்மி' என அழைக்கப்பட்டது. ஆயுஷ் மாத்ரே அசத்தியதால், அணியின் கொள்கை மாறியுள்ளது. அடுத்த ஆண்டு அமையும் புதிய கூட்டணியில் இளம் வீரர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட உள்ளது. பேட்டிங்கில் ஆயுஷ் மாத்ரே 17, ஷேக் ரஷீத் 20, டிவால்ட் பிரவிஸ் 21, வன்ஷ் பேடி 22, ரச்சின் 25, என இளம் படை களமிறங்கும். இவர்களுக்கு பக்கபலமாக ருதுராஜ், ஷிவம் துபே, ஜடேஜா, தோனி போன்ற 'சீனியர்'கள் இருப்பர்.

சிறந்த அணி தேர்வு: இது பற்றி தோனி கூறுகையில்,''இம்முறை தரமான கிரிக்கெட் விளையாடினோமா என சிந்திக்க வேண்டும். பேட்டர்கள் அதிக ரன் சேர்த்தால் தான் பவுலர்கள் சாதிக்க முடியும். மும்பைக்கு எதிராக குறைவான ஸ்கோர் எடுத்தோம். 'டெத் ஓவரில்' பும்ரா மிரட்டுவார். இவர் பந்துவீச வருவதற்கு முன் அதிரடியாக ரன் சேர்த்திருக்க வேண்டும்.

சிறப்பாக விளையாடியதால் தான் வெற்றிகரமான அணியாக வலம் வந்தோம். சிறப்பாக செயல்படாத தருணத்தில் உணர்ச்சிவசப்படக்கூடாது. யதார்த்த நிலையை யோசிக்க வேண்டும். 'பிளே-ஆப்' சற்றுக்கு தகுதி பெற முயற்சிப்பது அவசியம். இதற்கு வரும் போட்டிகள் அனைத்திலும் வெல்ல வேண்டும். ஒருவேளை சில போட்டிகளில் தோற்றால், அடுத்த ஆண்டுக்கான சிறந்த கூட்டணியை கண்டறிய வேண்டும். அருமையான 11 வீரர்களை தேர்வு செய்து, சிறப்பான முறையில் 'கம் பேக்' கொடுக்க வேண்டும்,''என்றார்.

உண்மை நிலை: பயிற்சியாளர் பிளமிங் கூறுகையில்,''தற்போதைய தொடரில் சென்னை அணியின் உண்மை நிலை பற்றி தெரியும். சற்று தன்னம்பிக்கை இழந்து காணப்படுகிறோம். வரும் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டு, திறமையான வீரர்களை கண்டறிய முயற்சிப்போம். அடுத்த ஆண்டுக்கான வெற்றி கூட்டணியை உருவாக்குவோம்,''என்றார்.

ரோகித் உற்சாகம்

மும்பை அணியின் ரோகித் 6 போட்டியில் 82 ரன் (0, 8, 13, 17, 18, 26) தான் எடுத்திருந்தார். சென்னை பந்துவீச்சை சிதறடித்த இவர், 45 பந்தில் 76 ரன் எடுத்து 'பார்மிற்கு' திரும்பினார். இது பற்றி ஆட்டநாயகன் ரோகித் கூறுகையில்,''என் திறமை மீது சந்தேகம் கிடையாது. கடினமாக பயிற்சி செய்து மீண்டு வருவேன். மனம் தெளிவாக இருந்தால், எல்லாம் சிறப்பாக நடக்கும். இதற்கு ஏற்ப சென்னைக்கு எதிராக அசத்தினேன். மும்பை அணி தொடர்ந்து மூன்று வெற்றிகளுடன் சரியான நேரத்தில் எழுச்சி கண்டுள்ளது. மும்பை, வான்கடே மைதானத்தின் ஒரு பகுதிக்கு எனது பெயர் வைக்கப்பட்டதை கவுரவமாக கருதுகிறேன்,''என்றார்.








      Dinamalar
      Follow us