UPDATED : அக் 18, 2026 12:00 AM
ADDED : அக் 17, 2026 06:46 PM

* ‘‘கணுக்கால் காயத்தில் இருந்து மெல்ல மீண்டு வருகிறேன். அடுத்த ஆண்டு முழு உடற்தகுதியுடன் வலிமையாக போட்டிக்கு திரும்புவேன்,’’ என, இந்திய ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா தெரிவித்துள்ளார்.
* சென்னையில் இன்று துவங்கவுள்ள ரஞ்சி கோப்பை கிரிக்கெட் ‘டி’ பிரிவு லீக் போட்டியில் தமிழகம், உத்தரகாண்ட் அணிகள் விளையாடுகின்றன. புதிய சண்டிகரில் நடக்கவுள்ள சத்தீஸ்கர் அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் அணி சார்பில் இந்திய டெஸ்ட் அணி கேப்டன் சுப்மன் கில் களமிறங்குகிறார்.
* கிரிக்கெட் லீக் தொடருக்கான மும்பை அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியில் இருந்து இலங்கையின் மகிளா ஜெயவர்தனே 49, விலகினார். இவர், மும்பை அணிக்கு 2017–22, 2025–26ல் பயிற்சியாளராக இருந்தார்.
* கிரிக்கெட் லீக் தொடருக்கான டில்லி அணியின் வேகப்பந்துவீச்சு பயிற்சியாளராக இலங்கையின் சமிந்தா வாஸ் நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த இரு சீசனில் இந்தியாவின் முனாப் படேல், இப்பதவியில் இருந்தார்.
* ஹாங்காங் சிக்சஸ் கிரிக்கெட் தொடருக்கான (அக். 30 – நவ. 1) இந்திய அணியில் இருந்து புவனேஷ்வர் குமார் விலகினார். இவருக்கு பதிலாக கேப்டனாக குர்னால் பாண்ட்யா, மாற்று வீராக குல்வந்த் கெஜ்ரோலியா நியமிக்கப்பட்டனர். தவிர இந்திய அணியில் சஷாங்க் சிங், ராகுல் திவாட்யா, நிதிஷ் ராணா, ராகுல் திரிபதி, நடராஜன் இடம் பெற்றுள்ளனர்.
