தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/கிரிக்கெட்/நியூசிலாந்திடம் வீழ்ந்தது பாகிஸ்தான்: சாம்பியன்ஸ் டிராபியில் ஏமாற்றம்

நியூசிலாந்திடம் வீழ்ந்தது பாகிஸ்தான்: சாம்பியன்ஸ் டிராபியில் ஏமாற்றம்

நியூசிலாந்திடம் வீழ்ந்தது பாகிஸ்தான்: சாம்பியன்ஸ் டிராபியில் ஏமாற்றம்


ADDED : பிப் 19, 2025 11:20 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 19, 2025 11:20 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கராச்சி: சாம்பியன்ஸ் டிராபி லீக் போட்டியில் ஏமாற்றிய பாகிஸ்தான் அணி 60 ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. நியூசிலாந்தின் வில் யங், டாம் லதாம் சதம் விளாசினர்.

பாகிஸ்தான், துபாயில், ஐ.சி.சி., சாம்பியன்ஸ் டிராபி 9வது சீசன் நடக்கிறது. கராச்சியில் நடந்த முதல் போட்டியில் 'நடப்பு சாம்பியன்' பாகிஸ்தான், நியூசிலாந்து அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற பாகிஸ்தான் கேப்டன் ரிஸ்வான் 'பீல்டிங்' தேர்வு செய்தார்.

நியூசிலாந்து அணிக்கு கான்வே (10), வில்லியம்சன் (1), டேரில் மிட்செல் (10) ஏமாற்றினர். பின் இணைந்த வில் யங், டாம் லதாம் ஜோடி விக்கெட் கைகொடுத்தது. பொறுப்பாக ஆடிய வில் யங், ஒருநாள் போட்டியில் தனது 4வது சதத்தை பதிவு செய்தார். நான்காவது விக்கெட்டுக்கு 118 ரன் சேர்த்த போது நசீம் ஷா பந்தில் வில் யங் (107) அவுட்டானார். மறுமுனையில் அசத்திய லதாம், ஒருநாள் போட்டியில் தனது 8வது சதத்தை எட்டினார். அபாரமாக ஆடிய பிலிப்ஸ், 34 பந்தில் அரைசதம் விளாசினார். இவர், 39 பந்தில், 4 சிக்சர், 3 பவுண்டரி உட்பட 61 ரன் எடுத்து அவுட்டானார்.

நியூசிலாந்து அணி 50 ஓவரில், 5 விக்கெட்டுக்கு 320 ரன் எடுத்தது. லதாம் (118*) அவுட்டாகாமல் இருந்தார். பாகிஸ்தான் சார்பில் நசீம் ஷா, ஹாரிஸ் ராப் தலா 2 விக்கெட் கைப்பற்றினர்.

பாபர் அரைசதம்: கடின இலக்கை விரட்டிய பாகிஸ்தான் அணிக்கு சவுத் ஷகீல் (6), கேப்டன் முகமது ரிஸ்வான் (3) ஏமாற்றினர். பகார் ஜமான் (24), சல்மான் ஆகா (42) ஓரளவு கைகொடுத்தனர். பொறுப்பாக ஆடிய பாபர் ஆசம் (64), குஷ்தில் ஷா (69) அரைசதம் கடந்தனர். ஷகீன் ஷா அப்ரிதி (14), நசீம் ஷா (13), ஹாரிஸ் ராப் (19) நிலைக்கவில்லை.

பாகிஸ்தான் அணி 47.2 ஓவரில் 260 ரன்னுக்கு 'ஆல்-அவுட்'டாகி தோல்வியடைந்தது. நியூசிலாந்து சார்பில் ஓரூர்கே, சான்ட்னர் தலா 3, மாட் ஹென்றி 2 விக்கெட் சாய்த்தனர். ஆட்ட நாயகன் விருதை நியூசிலாந்தின் டாம் லதாம் வென்றார்.

'ஹாட்ரிக்' தோல்வி

சமீபத்தில் பாகிஸ்தானில் நடந்த முத்தரப்பு தொடரின் லீக், பைனலில் பாகிஸ்தான் அணி, நியூசிலாந்திடம் தோல்வியடைந்தது. நேற்று, சாம்பியன்ஸ் டிராபி லீக் போட்டியிலும் ஏமாற்றிய பாகிஸ்தான், நியூசிலாந்துக்கு எதிராக 'ஹாட்ரிக்' தோல்வியை பெற்றது. * தவிர சாம்பியன்ஸ் டிராபி வரலாற்றில் நியூசிலாந்து அணி, பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடிய 4 போட்டியிலும் வெற்றி (2000, 2006, 2009, 2025) பெற்று ஆதிக்கம் செலுத்துகிறது.



அதிவேக அரைசதம்

அபாரமாக ஆடிய பாகிஸ்தானின் குஷ்தில் ஷா, 38 பந்தில் அரைசதத்தை பதிவு செய்தார். சாம்பியன்ஸ் டிராபி அரங்கில் நியூசிலாந்துக்கு எதிராக அதிவேக அரைசதம் விளாசிய வீரரானார். இதற்கு முன் 2013ல் கார்டிப்பில் நடந்த போட்டியில் இங்கிலாந்தின் அலெஸ்டர் குக், 39 பந்தில் அரைசதம் எட்டினார்.

ஐந்தாவது முறை

வில் யங், லதாம் சதம் விளாசியதன் மூலம் சாம்பியன்ஸ் டிராபியில், ஒரு இன்னிங்சில் இரண்டு வீரர்கள் சதம் அடித்தது 5வது முறையாக அரங்கேறியது. ஏற்கனவே 2002ல் (எதிர்: இங்கிலாந்து) இந்தியாவின் சேவக் (126), கங்குலி (117*), 2006ல் வெஸ்ட் இண்டீசின் (எதிர்: இங்கிலாந்து) கெய்ல் (101), டுவைன் பிராவோ (112*), 2009ல் ஆஸ்திரேலியாவின் (எதிர்: இங்கிலாந்து) வாட்சன் (136*), பாண்டிங் (111*), 2017ல் வங்கதேசத்தின் (எதிர்: நியூசி.,) சாகிப் (114), மகமதுல்லா (102*) இப்படி சாதித்திருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us