தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/செய்திகள்/விளையாட்டு/கிரிக்கெட்/சென்னையில் பைனல்: ஐ.பி.எல்., அட்டவணை வெளியீடு

சென்னையில் பைனல்: ஐ.பி.எல்., அட்டவணை வெளியீடு

சென்னையில் பைனல்: ஐ.பி.எல்., அட்டவணை வெளியீடு


ADDED : மார் 25, 2024 11:07 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 25, 2024 11:07 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுடில்லி: ஐ.பி.எல்., தொடருக்கான முழு அட்டவணை வெளியானது. பைனல் மார்ச் 26ல் சென்னையில் நடக்கிறது.

இந்தியாவில் ஐ.பி.எல்., 17வது சீசன் மார்ச் 22ல் துவங்கியது. இதுவரை 6 போட்டிகள் முடிந்துள்ளன. லோக்சபா தேர்தல் காரணமாக முதல் 21 போட்டிகளுக்கான அட்டவணை மட்டும் வெளியானது. இதனால் மீதமுள்ள போட்டிகள் இந்தியாவில் நடத்தப்படுமா என்ற சந்தேகம் நிலவியது. இந்நிலையில் இத்தொடருக்கான முழு அட்டவணை வெளியிடப்பட்டது. இதன்படி பைனல் உட்பட அனைத்து போட்டிகளும் (74) இந்தியாவில் நடத்தப்படுகிறது.

கடைசி லீக் போட்டி மே 19ல் நடக்கிறது. 'பிளே-ஆப்' சுற்றுப் போட்டிகள் ஆமதாபாத், சென்னையில் நடத்தப்படுகிறது. இதில் தகுதிச் சுற்று-1 (மே 21), 'எலிமினேட்டர்' (மே 22) போட்டிகள் ஆமதாபாத்தில் உள்ள உலகின் மிகப் பெரிய மோடி மைதானத்தில் நடக்கிறது. தகுதிச் சுற்று-2 (மே 24), பைனல் (மே 26) சென்னையில் உள்ள சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கிறது. இதன்மூலம் ஐ.பி.எல்., பைனல் 3வது முறையாக சென்னையில் நடக்கவுள்ளது. இதற்கு முன் 2011, 2012ல் நடத்தப்பட்டது.

சென்னை அணி சொந்த மண்ணில் தனது கடைசி லீக் போட்டியை மே 12ல் (எதிர்: ராஜஸ்தான்) விளையாடுகிறது. மே 18ல் பெங்களூருவில் நடக்கும் போட்டி இத்தொடரில் சென்னை அணி பங்கேற்கும் கடைசி லீக் போட்டியாகும்.

எஞ்சிய போட்டிகளுக்கான அட்டவணை.

நாள் மோதும் அணிகள் இடம்

மார்ச் 22 சென்னை - பெங்களூரு சென்னை

மார்ச் 23* பஞ்சாப் - டில்லி மொகாலி

மார்ச் 23 கோல்கட்டா - ஐதராபாத் கோல்கட்டா

மார்ச் 24* ராஜஸ்தான் - லக்னோ ஜெய்ப்பூர்

மார்ச் 24 குஜராத் - மும்பை ஆமதாபாத்

மார்ச் 25 பெங்களூரு - பஞ்சாப் பெங்களூரு

மார்ச் 26 சென்னை - குஜராத் சென்னை

மார்ச் 27 ஐதராபாத் - மும்பை ஐதராபாத்

மார்ச் 28 ராஜஸ்தான் - டில்லி ஜெய்ப்பூர்

மார்ச் 29 பெங்களூரு - கோல்கட்டா பெங்களூரு

மார்ச் 30 லக்னோ - பஞ்சாப் லக்னோ

மார்ச் 31* குஜராத் - ஐதராபாத் ஆமதாபாத்

மார்ச் 31 டில்லி - சென்னை விசாகப்பட்டனம்

ஏப். 1 மும்பை - ராஜஸ்தான் மும்பை

ஏப். 2 பெங்களூரு - லக்னோ பெங்களூரு

ஏப். 3 டில்லி - கோல்கட்டா விசாகப்பட்டனம்

ஏப். 4 குஜராத் - பஞ்சாப் ஆமதாபாத்

ஏப். 5 ஐதராபாத் - சென்னை ஐதராபாத்

ஏப். 6 ராஜஸ்தான் - பெங்களூரு ஜெய்ப்பூர்

ஏப். 7* மும்பை - டில்லி மும்பை

ஏப். 7 லக்னோ - குஜராத் லக்னோ

ஏப். 8 சென்னை - கோல்கட்டா சென்னை

ஏப். 9 பஞ்சாப் - ஐதராபாத் மொகாலி

ஏப். 10 ராஜஸ்தான் - குஜராத் ஜெய்ப்பூர்

ஏப். 11 மும்பை - பெங்களூரு மும்பை

ஏப். 12 லக்னோ - டில்லி லக்னோ

ஏப். 13 பஞ்சாப் - ராஜஸ்தான் மொகாலி

ஏப். 14* கோல்கட்டா - லக்னோ கோல்கட்டா

ஏப். 14 மும்பை - சென்னை மும்பை

ஏப். 15 பெங்களூரு - ஐதராபாத் பெங்களூரு

ஏப். 16 குஜராத் - டில்லி ஆமதாபாத்

ஏப். 17 கோல்கட்டா - ராஜஸ்தான் கோல்கட்டா

ஏப். 18 பஞ்சாப் - மும்பை மொகாலி

ஏப். 19 லக்னோ - சென்னை லக்னோ

ஏப். 20 டில்லி - ஐதராபாத் டில்லி

ஏப். 21* கோல்கட்டா - பெங்களூரு கோல்கட்டா

ஏப். 21 பஞ்சாப் - குஜராத் மொகாலி

ஏப். 22 ராஜஸ்தான் - மும்பை ஜெய்ப்பூர்

ஏப். 23 சென்னை - லக்னோ சென்னை

ஏப். 24 டில்லி - குஜராத் டில்லி

ஏப். 25 ஐதராபாத் - பெங்களூரு ஐதராபாத்

ஏப். 26 கோல்கட்டா - பஞ்சாப் கோல்கட்டா

ஏப். 27* டில்லி - மும்பை டில்லி

ஏப். 27 லக்னோ - ராஜஸ்தான் லக்னோ

ஏப். 28* குஜராத் - பெங்களூரு ஆமதாபாத்

ஏப். 28 சென்னை - ஐதராபாத் சென்னை

ஏப். 29 கோல்கட்டா - டில்லி கோல்கட்டா

ஏப். 30 லக்னோ - மும்பை லக்னோ

மே 1 சென்னை - பஞ்சாப் சென்னை

மே 2 ஐதராபாத் - ராஜஸ்தான் ஐதராபாத்

மே 3 மும்பை - கோல்கட்டா மும்பை

மே 4 பெங்களூரு - குஜராத் பெங்களூரு

மே 5* பஞ்சாப் - சென்னை தர்மசாலா

மே 5 லக்னோ - கோல்கட்டா லக்னோ

மே 6 மும்பை - ஐதராபாத் மும்பை

மே 7 டில்லி - ராஜஸ்தான் டில்லி

மே 8 ஐதராபாத் - லக்னோ ஐதராபாத்

மே 9 பஞ்சாப் - பெங்களூரு தர்மசாலா

மே 10 குஜராத் - சென்னை ஆமதாபாத்

மே 11 கோல்கட்டா - மும்பை கோல்கட்டா

மே 12* சென்னை - ராஜஸ்தான் சென்னை

மே 12 பெங்களூரு - டில்லி பெங்களூரு

மே 13 குஜராத் - கோல்கட்டா ஆமதாபாத்

மே 14 டில்லி - லக்னோ டில்லி

மே 15 ராஜஸ்தான் - பஞ்சாப் கவுகாத்தி

மே 16 ஐதராபாத் - குஜராத் ஐதராபாத்

மே 17 மும்பை - லக்னோ மும்பை

மே 18 பெங்களூரு - சென்னை பெங்களூரு

மே 19* ஐதராபாத் - பஞ்சாப் ஐதராபாத்

மே 19 ராஜஸ்தான் - கோல்கட்டா கவுகாத்தி

மே 21 தகுதிச் சுற்று-1 ஆமதாபாத்

மே 22 'எலிமினேட்டர்' ஆமதாபாத்

மே 24 தகுதிச் சுற்று-2 சென்னை

மே 26 பைனல் சென்னை

போட்டிகள் இரவு 7:30 மணிக்கு துவங்கும்.

* மதியம் 3:30 மணிக்கு துவங்கும் போட்டிகள்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us