/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
பெர்த் மைதானத்தில் முதல் சவால் * வெளியானது இந்தியா-ஆஸி., அட்டவணை
/
பெர்த் மைதானத்தில் முதல் சவால் * வெளியானது இந்தியா-ஆஸி., அட்டவணை
பெர்த் மைதானத்தில் முதல் சவால் * வெளியானது இந்தியா-ஆஸி., அட்டவணை
பெர்த் மைதானத்தில் முதல் சவால் * வெளியானது இந்தியா-ஆஸி., அட்டவணை
ADDED : மார் 26, 2024 09:39 PM

மெல்போர்ன்: இந்தியா, ஆஸ்திரேலிய அணிகள் மோதும் டெஸ்ட் தொடர் பெர்த் மைதானத்தில் துவங்குகிறது.
இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் 1996 முதல் 'பார்டர்-கவாஸ்கர்' டெஸ்ட் தொடரில் மோதி வருகின்றன. கடைசி நான்கு தொடரிலும் இந்தியா கோப்பை வென்றது. வரும் 2024-25 முதல் இத்தொடர் ஐந்து போட்டி கொண்டதாக மாற்றப்பட்டுள்ளது.
இதில் பங்கேற்க இந்திய அணி, நவம்பர் மாதம் ஆஸ்திரேலியா செல்லவுள்ளது. இதற்கான அட்டவணை நேற்று வெளியானது. வழக்கமாக அடிலெய்டு மைதானத்தில் முதல் டெஸ்ட் துவங்கும். இம்முறை பெர்த் மைதானத்தில் நவ. 22-26ல் முதல் டெஸ்ட் துவங்க உள்ளது.
அடுத்து 9 நாள் இடைவெளிக்குப் பின் இரண்டாவது டெஸ்ட் பகலிரவு போட்டியாக, அடிலெய்டில் டிசம்பர் 6-10ல் நடக்கும். இதற்கு தயாராகும் வகையில் இந்திய அணியினர், பகலிரவு பயிற்சியில் ஈடுபட உள்ளனர்.
மூன்றாவது டெஸ்ட் பிரிஸ்பேனில் (டிச. 14-18) நடக்க உள்ளது. நான்காவது டெஸ்ட் 'பாக்சிங் டே' போட்டியாக டிசம்பர் 26-30ல் மெல்போர்ன் மைதானத்தில் நடக்கும். கடைசி, ஐந்தாவது டெஸ்ட் 2024, ஜன. 3-7ல் சிட்னியில் நடக்க உள்ளது.
அட்டவணை
தேதி போட்டி இடம்
நவ. 22-26 முதல் டெஸ்ட் பெர்த்
டிச. 6-10 2வது டெஸ்ட் அடிலெய்டு
டிச. 14-18 3வது டெஸ்ட் பிரிஸ்பேன்
டிச. 26-30 4வது டெஸ்ட் மெல்போர்ன்
ஜன. 3-7 5வது டெஸ்ட் சிட்னி
(2025)
பெண்கள் மோதல்
இந்திய பெண்கள் அணி ஆஸ்திரேலிய மண்ணில் மூன்று போட்டி கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்க உள்ளது. போட்டிகள் டிச. 5, 8ல் பிரிஸ்பேன், டிச. 11ல் பெர்த் மைதானத்தில் நடக்க உள்ளன.

