தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/கிரிக்கெட்/கோவை அணிக்கு முதல் வெற்றி: நெல்லை அணி ஏமாற்றம்

கோவை அணிக்கு முதல் வெற்றி: நெல்லை அணி ஏமாற்றம்

கோவை அணிக்கு முதல் வெற்றி: நெல்லை அணி ஏமாற்றம்


ADDED : ஜூன் 21, 2025 11:18 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 21, 2025 11:18 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நெல்லை: கோவை அணி 67 ரன் வித்தியாசத்தில் நெல்லையை வீழ்த்தி, முதல் வெற்றி பெற்றது.

நெல்லையில் நடந்த டி.என்.பி.எல்., லீக் போட்டியில் நெல்லை, கோவை அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற நெல்லை அணி கேப்டன் அருண் கார்த்திக், 'பவுலிங்' தேர்வு செய்தார்.

கோவை அணிக்கு சுரேஷ் லோகேஷ்வர், கேப்டன் ஷாருக்கான் (30) ஜோடி கைகொடுத்தது. லோகேஷ்வர், 39 பந்தில் அரைசதம் எட்டினார். கோவை அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 165 ரன் எடுத்தது. லோகேஷ்வர் (90 ரன், 5 சிக்சர்), திவாகர் (12) அவுட்டாகாமல் இருந்தனர்.

சவாலான இலக்கை விரட்டிய நெல்லை அணி 17.5 ஓவரில் 98 ரன்னுக்கு சுருண்டு தோல்வியடைந்தது. அத்னன் கான் (26), சோனு யாதவ் (23) ஆறுதல் தந்தனர். கோவை சார்பில் திவாகர் 3 விக்கெட் சாய்த்தார்.ஆட்ட நாயகன் விருதை லோகேஷ்வர் வென்றார். இதுவரை விளையாடிய ஐந்து போட்டியில், ஒரு வெற்றி, 4 தோல்வியை பெற்றது கோவை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us