தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/கிரிக்கெட்/குஜராத் அணிக்கு முதல் வெற்றி: பெங்களூரு அணி ஏமாற்றம்

குஜராத் அணிக்கு முதல் வெற்றி: பெங்களூரு அணி ஏமாற்றம்

குஜராத் அணிக்கு முதல் வெற்றி: பெங்களூரு அணி ஏமாற்றம்


ADDED : மார் 06, 2024 10:54 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 06, 2024 10:54 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

டில்லி: பிரிமியர் லீக் தொடரில் குஜராத் அணி முதல் வெற்றி பெற்றது. லீக் போட்டியில் 19 ரன் வித்தியாசத்தில் பெங்களூருவை வீழ்த்தியது.

இந்தியாவில் பெண்களுக்கான பிரிமியர் லீக் கிரிக்கெட் 2வது சீசன் நடக்கிறது. டில்லியில் நடந்த லீக் போட்டியில் குஜராத், பெங்களூரு அணிகள் மோதின.

'டாஸ்' வென்று முதலில் 'பேட்' செய்த குஜராத் அணிக்கு லாரா வால்வார்ட், கேப்டன் பெத் மூனே ஜோடி சூப்பர் துவக்கம் கொடுத்தது. இருவரும் அரைசதம் விளாசினர். முதல் விக்கெட்டுக்கு 140 ரன் சேர்த்த போது லாரா (76 ரன், 13 பவுண்டரி) 'ரன்-அவுட்' ஆனார்.

குஜராத் அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 199 ரன் எடுத்தது. மூனே (85 ரன், 12 பவுண்டரி, ஒரு சிக்சர்), கேத்ரின் பிரைஸ் (1) அவுட்டாகாமல் இருந்தனர்.

சவாலான இலக்கை விரட்டிய பெங்களூரு அணிக்கு மேகனா (4) ஏமாற்றினார். கேப்டன் ஸ்மிருதி மந்தனா (24), எல்லிஸ் பெர்ரி (24), சோபி டெவின் (23), ரிச்சா கோஷ் (30) ஓரளவு கைகொடுத்தனர். அபாரமாக ஆடிய ஜார்ஜியா வேர்ஹாம் (48) அரைசத வாய்ப்பை இழந்தார். கடைசி ஓவரில் வெற்றிக்கு 33 ரன் தேவைப்பட்டன. கார்ட்னர் வீசிய இந்த ஓவரில் 13 ரன் மட்டும் கிடைத்தது.

பெங்களூரு அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 180 ரன் மட்டும் எடுத்து தோல்வியடைந்தது. குஜராத் சார்பில் கார்ட்னர் 2 விக்கெட் வீழ்த்தினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us